“மயிலிறகாய் மனதை வருடியவர்” - பவதாரிணி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி

“மயிலிறகாய் மனதை வருடியவர்” - பவதாரிணி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி

Published on

சென்னை: “மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த நேரத்தில் உங்களுடன் துணை நிற்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in