Published : 13 Jan 2024 04:15 PM
Last Updated : 13 Jan 2024 04:15 PM

மகேஷ்பாபு படங்களில் அதிகபட்ச ஓபனிங் - ‘குண்டூர் காரம்’ ரூ.94 கோடி வசூல்!

ஹைதராபாத்: மகேஷ்பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ படம் உலகம் முழுவதும் முதல் நாள் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஆல வைகுந்தபுரமுலோ’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவரது இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ படம் சக்ராந்தியை முன்னிட்டு நேற்று (ஜன.12) திரையரங்குகளில் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட்டாக உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் மகேஷ்பாபு படங்களில் அதிகபட்ச ஓபனிங் கொண்ட படம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா பகுதியில் போட்டிக்கு எந்த படமும் இல்லாததால் ரசிகர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. முன்னதாக, கடந்த ஆண்டு வெளியான மகேஷ்பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’ முதல் நாள் ரூ.75 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x