Published : 23 Nov 2023 05:35 AM
Last Updated : 23 Nov 2023 05:35 AM

ரஜினியுடன் நடிக்க தயாராக இருக்கிறேன்: மம்மூட்டி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினியின் 171-வது படமான இதில் மம்மூட்டியை முக்கிய கேரக்டரில் நடிக்க கேட்டதாகவும் ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள மம்மூட்டி, ‘‘ரஜினிபடத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அப்படி கேட்டால், கண்டிப்பாக நடிப்பேன்” என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி நடித்த ‘தளபதி’ படம் சூப்பர் ஹிட்டானது. ரஜினியின் 171- வதுபடத்தில் மம்மூட்டி நடித்தால் அதன் வரவேற்பு வேறு மாதிரி இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x