Published : 17 Nov 2023 03:41 PM
Last Updated : 17 Nov 2023 03:41 PM

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூலகங்கள் தொடக்கம்

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ‘தளபதி விஜய் நூலகம்’ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்படும் என அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் பயிலகம் திட்டத்தினை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை சனிக்கிழமை அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து துவக்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டத்தினை துவக்கி வைக்கிறார். அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.

மேலும் இரண்டாம் கட்டமாக வருகின்ற 23.11.2023 (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும் ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து 21 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது” என்று அதில் தெரிவித்துள்ளார்.

10, 12 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி ஏழை குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலை திட்டம் மற்றும் இலவச சட்ட உதவி மையம் ஆகியவை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இந்த நூலக திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x