Published : 25 Oct 2023 09:30 AM
Last Updated : 25 Oct 2023 09:30 AM

’லியோ’ பாடல் காப்பியா? - மீண்டும் காப்புரிமை பிரச்சினையில் அனிருத்

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற ’ஆர்டினரி பெர்சன்’ என்ற பாடல் ஆங்கில வெப் தொடரில் வரும் பாடலின் காப்பி என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலக அளவில் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆர்டினரி பெர்சன்’ என்ற பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த பாடல் ‘Peaky Blinders’ என்ற பிரபலமான வெப் தொடரில் வரும் 'I'm not outsider' என்ற பாடலின் காப்பி என்று பலரும் கூறிவந்தனர்.

இந்த நிலையில் ‘ஆர்டினரி பெர்சன்’ பாடல் வெளியான பிறகு, நெட்டிசன்கள் சிலர் ‘Peaky Blinders’ இசையமைப்பாளர் ஓட்னிக்காவின் (Otnicka) சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து முறையிட்டனர். இதற்கு பதிலளித்த அவர், ’லியோ’ என்ற படம் குறித்து எனக்கு நூற்றுக்கணககன மெசேஜ் அனுப்பியவர்களுக்கு நன்றி. என்னால் அனைத்தையும் பார்க்க முடிகிறது. ஆனால் அனைவருக்கும் என்னால் பதிலளிப்பது இயலாத காரியம். என்னுடைய மெயில், இன்ஸ்டாகிராம் ஆகியவை மெசேஜ்களால் நிரம்பி வழிகிறது. இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் என்ன நடக்கிறது என்பது குறித்து தெரியப்படுத்துகிறேன்.ஆனால் நான் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை” இவ்வாறு ஓட்னிக்கா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற ‘கல்யாண வயசுதான்’ என்ற பாடலும் இதே காப்புரிமை பிரச்சினையில் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x