Published : 16 Oct 2023 05:32 AM
Last Updated : 16 Oct 2023 05:32 AM

நடிகர் பிரபாஸின் இன்ஸ்டா கணக்கு முடக்கம்

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் டிச.22ம் தேதி வெளியாகிறது. இதில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அடுத்து நாக் அஷ்வின் இயக்கும் ‘கல்கி 2898’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து ‘ராஜா டீலக்ஸ்’, ‘ஸ்பிரிட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே இவருடைய இன்ஸ்டாகிராம் கணக்குத் திடீரென மாயமாகி இருக்கிறது. ஏராளமான பாலோயர்களை கொண்ட அவர் இன்ஸ்டா பக்கம் மாயமானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தக் கணக்கை அவரே முடக்கி வைத்தாரா? அல்லது மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. இதுகுறித்து பிரபாஸ் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x