Published : 11 Oct 2023 06:03 AM
Last Updated : 11 Oct 2023 06:03 AM

‘லியோ’ படத்துக்கு 13 கட்

சென்னை: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘லியோ’. சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் வரும் 19 தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, வரவேற்பைப் பெற்றது. அதில் இடம்பெற்ற ஆபாச வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தப் படம் தணிக்கைக்குச் சென்றது. படத்தைப் பார்த்த தணிக்கை குழு இதில் 13 இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டது. ஆபாச வார்த்தை இடம்பெறும் இடத்தில் ‘பீப்’ ஒலி இடம் பெற வேண்டும். புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள், மது அருந்துதல் குறித்த காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும். ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகளைக் குறைக்கவேண்டும் என்பது உள்பட 13 திருத்தங்களைச் செய்ய அறிவுறுத்தியது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x