Published : 03 Oct 2023 02:03 PM
Last Updated : 03 Oct 2023 02:03 PM

முன்கூட்டியே வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’

மும்பை: விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் ’அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக்காகிறது. இப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் அடுத்ததாக இயக்கும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.

இதனையடுத்து நீண்ட இழுபறிக்குப் பிறகு இப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு மீண்டும் மாற்றி அமைத்துள்ளது. இப்படம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ரிலீஸ் தேதியிலிருந்து ஒரு வாரம் முன்கூட்டியே வெளியாகிறது. அதன்படி இப்படம் டிசம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு ப்ரீத்தம் இசையமைக்கிறார். தமிழில் பாடல் வரிகளை யுகபாரதி எழுதுகிறார். மது நீலண்டன் ஒளிப்பதிவு செய்ய, பூஜா லதா சூர்தி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x