Published : 29 Sep 2023 12:17 PM
Last Updated : 29 Sep 2023 12:17 PM

விஜய் ஆண்டனியின் ’ஹிட்லர்’ ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இப்படம் தவிர்த்து ’மழை பிடிக்காத மனிதன்’, ‘வள்ளி மயில்' ஆகிய படங்களில் விஜய் ஆண்டனி கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்துக்கு நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x