Published : 27 Sep 2023 04:33 PM
Last Updated : 27 Sep 2023 04:33 PM

“வீழ்ந்து எழுவதே பெருமை” - செப்டிமியஸ் விருது பெற்ற டோவினோ தாமஸ் நெகிழ்ச்சி

நெதர்லாந்து: ‘2018’ படத்துக்காக மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு ‘சிறந்த ஆசிய நடிகர்’ பிரிவில் செப்டிமியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “வீழாமல் இருப்பதல்ல பெருமை. ஒவ்வொரு முறை வீழும்போதும் எழுவதே பெருமை. 2108-ல் ஏற்பட்ட பெருவெள்ளம் நம் கதவுகளை தட்டியபோது கேரளா வீழத் தொடங்கியது. ஆனால், அதன் பிறகு கேரள மக்கள எதனால் உருவாக்கப்பட்டார்கள் என்பதை உலகம் பார்த்தது.

என்னை சிறந்த ஆசிய நடிகராக தேர்ந்தெடுத்த ‘SEPTIMIUS AWARDS’ குழுவுக்கு நன்றி. இது எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும். இந்த சர்வதேச அங்கீகாரம் ‘2018’ திரைப்படத்தில் எனது நடிப்புக்காக கிடைத்துள்ளது. இது கேரளாவுக்கானது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் டோவினோ தாமஸுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் அவர் நடித்துள்ள ‘2018’ திரைப்படம் தற்போது இந்தியா சார்பாக ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகியுள்ளது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் 25-26 ஆகிய நாட்களில் ‘SEPTIMIUS AWARDS’ வழங்கப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் உள்ள சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் இந்த மதிப்புமிக்க விருது விழாவில் டோவினோ தாமஸ் கலந்துகொண்டு விருதை பெற்றுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x