Published : 16 Dec 2017 05:34 PM
Last Updated : 16 Dec 2017 05:34 PM

சென்னை பட விழா | தேவி | டிசம்.17 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்.17) தேவி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.00 மணி | A SPECIAL DAY / YEKROUZBEKHOSOS | DIR: HOMAYOUN ASSADIAN | PERSIAN | 2017 | 93'

தனது தங்கைக்கு உள்ள இதய நோயைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் குடைந்துகொண்டிருக்கிறது ஹமீது என்ற இளைஞனுக்கு. இதற்காக வித்தியாசமான ஒரு வாய்ப்பை கண்டுபிடிக்கிறான். அவர்களுக்கு அந்த வாய்ப்பு எப்படி நல்லபடியாக அமைந்தது என்பதை இப்படம் சொல்கிறது.

பிற்பகல் 2.00 மணி | PURE HEARTS / CUORIPURI | DIR: ROBERTO DE PAOLIS | ITALIAN | 2017 | 115'

அக்னீஸ் மற்றும் ஸ்டீஃபனோ இருவருக்கும் நிறைய வேறுபாடு. ஆக்னீஸுக்கு 17 வயதுதான் ஆகிறது, தனது தாயுடன் வாழ்கிறாள். (கொஞ்சம் கோபப்படும் குணம். ஆனால் அர்ப்பணிப்புள்ள பெண்மணி மற்றும் வழக்கமாக சர்ச்க்கு செல்லக்கூடியவள்) ஆக்னிஸ் திருமணம் செய்துகொள்ள சாக்குபோக்கு சொல்லி வருகிறாள். ஸ்டீபனுக்கு ஒரு 25 வயது இளைஞன், ஒரு வன்முறைத்தனமான கோபமும், கடினமான கடந்தகாலம் கொண்டவன், ஜிப்சி முகாமுடன் எல்லைகளை கொண்டிருக்கும் ஒரு கார்டனில் ஒரு வார்டனாக பணிபுரிகிறான். அவர்களின் எதிர்பாராத சந்திப்பு தூய்மையான ஒரு அன்பை உருவாக்குகிறது, கிடைக்கும் சிற்சிலநேரங்களில் ஒருவருக்கொருவர் உதவிகரமாக உள்ளனர். முதல் முறையாக அவர்கள் காதலிக்கத் தொடங்கும்போது ஆக்னிஸ்ஸின் தூய்மை எனும் மாயை நொறுங்குகிறது. இதுகுறித்து அவள் யோசிக்கத் தொடங்குகிறாள். தனது பாவம் அழிக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஒரு தீவிர முடிவை எடுக்க வழிவகுக்கிறது.

பிற்பகல் 4.30 மணி | PAULA / PAULA - MEIN LEBENSOLLEIN FEST SEIN | DIR: CHRISTIAN SCHWOCHOW | GERMAN / FRENSH | 2016 | 123'

19வது - 20வது நூற்றாண்டில் நடக்கும் கதை. ஜெர்மனியின் புகழ்பெற்ற பெண் ஓவியர் பாலா மாடர்ஷனின் வாழ்க்கையை சொல்கிறது. குறிப்பாக ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் அவர் திறம்பட அதிக ஓவியங்கள் வரைந்த வருடங்களை சொல்கிறது. கலை உலகில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு படத்தின் முக்கிய புள்ளி. மேலும், அந்த காலகட்டத்தில் இருந்த மற்ற கலைஞர்கள், கவிஞர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் மாடர்ஷனின் உறவை பற்றியும் சொல்கிறது.

பிற்பகல் 7.00 மணி | GOOD TIME / BOM COMPORTAMENTO | DIR: BENNY SAFDIE, JOSH SAFDIE | ENGLISH |2017 | 101'

வங்கிக்கொள்ளையில் சகோதரர்கள் இருவர் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவன் கைது செய்யப்பட இன்னொருவன் தப்பித்துவிடுகிறான். நகரத்தின் நிழல் வாழ்க்கையில் இருந்தவாறு என்ன செய்வது என யோசிக்கிறான். தன் தம்பியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் ஆபத்துகள் நிறைந்தவை..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x