Published : 17 Dec 2017 18:19 pm

Updated : 17 Dec 2017 18:19 pm

 

Published : 17 Dec 2017 06:19 PM
Last Updated : 17 Dec 2017 06:19 PM

சென்னை பட விழா | அண்ணா | டிசம்.18 | படக்குறிப்புகள்

18

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை (டிசம்.18) அண்ணா திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.30 மணி | LIFE IS LOVELY / YASAMAK GUZEL SEY | DIR: MUFIT CAN SANCINTI | TURKISH | 2017 | 105'


சமுதாயத்தில் வாழ்க்கை நெறிமுறைகளையும் அறத்தையும் பற்றிய கேள்வி எழுப்பும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில்தான் அவர் கேள்வியை எழுப்புகிறார். வாழ்க்கை நெறிமுறைகள் சார்ந்த ஆழமான புரிதலை மட்டுமல்ல சூழலியல் சார்ந்த ஒருதேவையையும் இப்படம் பேசுகிறது. எந்த தத்துவ பின்புலமும் இன்றி தனது செயல்கள் வாயிலாகவே தனது கருத்துக்களை சொல்கிறார். வாழ்க்கையின் அழகை தேடிக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்துவிட்டு தனது மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்வதுதான் சரியானது என உணர்கிறார். தனது தாயிடமிருந்து விலகிச் செல்லாமல் அவரோடு இருக்க என்ன வழி என்று முடிவெடுப்பதும் இதில் அடங்கும். தனது தந்தையிடம் சொல்வதை அவர் எப்படி எடுத்துக்கொள்கிறார், முதல் நாள் வாழ்க்கையில் சந்தித்ததுபோலவே மனைவியை நடத்துகிறார். அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் அவளை காதலித்தது, அப்போது அவனது உண்மையான பிறந்தநாளை அவள் சொன்ன தான் நொறுக்கப்பட்ட அனுபவத்தைப் பற்றி கூறுகிறார். முஃப்பித் நீண்டநாட்களாக காத்திருந்த விடுமுறைக்கு தன் மகளோடும் மனைவியோடும் வெளியே செல்கிறார். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிமுறைகள் என்ன அது உன்னுள்ளேயே இருக்கிறது என்கிறார்.

பகல் 12 மணி | BECAUSE I LOVE YOU / SARANGHAGI TTAEMOONE | DIR: JIHONGJU AS JUJI-HONG | KOREAN | 2017 | 110'

லீ ஹையோங் அற்புதமான பாடலாசிரியர், பாடகர், ஒரு எதிர்பாராத விபத்தில் இறந்தபிறகு அவரது ஆவி சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. பாடலாசிரியரின் ஆவி அன்பின் தூதனாக மாறி, அன்பைக் கண்டறிந்து, காதல் உணர்ச்சிகளில் சிக்கியுள்ளவர்களை இணைப்பதற்கான சக்தியைப் பெறுகிறார். ஒரு நபரின் உடலில் நுழைந்து அவரது காதல் கைகூடும் நிலையில் அந்நபரிடமிருந்து விடைபெறுகிறார். அழகான காதல் கதைகளை உள்ளடக்கிய இப்படம் வித்தியாசமான பொழுதுபோக்குத் திரைக்கதையைக்கொண்டது. பாடலாசிரியர்கள் எப்பொழுதும் காதலுக்கு துணைநிற்பார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் படம்.

பிற்பகல் 2.30 மணி | BLOSSOMING INTO A FAMILY / MADOU: AFTER THE RAIN | DIR: HIROKI HAYASHI | JAPANESE | 2016 | 126'

''ஒரு இனிய குடும்பத்தின் அன்பை நான் எப்போதும் உணர்ந்ததில்லை.'' - லட்சியவாதியான ஈச்சிரோவால் ஒரு குழந்தையாக தத்தெடுக்கப்பட்ட சீஷிரோவின் 1948ன் ஆண்டுக் குறிப்பிலிருந்து காணப்படும் வாசகம் இது. 1980கள், இசுமி ஒரு வங்கியில் பணியாற்றுகிறாள். அவள் தனது தாய் இடோவுடன் வசிக்கிறாள். இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து, இசுமி திருமணத்திற்கு முன்தினம், ஒரு குளிர்கால இரவு. இசுமியைப் பற்றி அவளின் மறைந்த தந்தை சீஷிரோவின் கனவைப் பற்றிச் சொல்கிறார். அவளின் தந்தையின் கனவு இசுமியின் திருமணம்தான் என்கிறார். அவ்வேளையில் அவளுடைய அன்பான தந்தையைப் பற்றி நினைத்துப் பார்க்கிறாள். இதற்கிடையில் என்ன நடந்தது? தலைகீழான காலவரிசை முறையில் இந்தப் படம் ஒருவரைப் பற்றிய கதையைக் கூறுகிறது.

மாலை 4.30 மணி | BEAUTY AND THE DOGS / AALA KAFIFRIT | DIR: KAUTHER BEN HANIA | TUNISIAN | 2017 | 100'

மரியம் ஓர் இளம் துனிசியன் மாணவி. ஒரு பூவைப் போன்ற அழகு மிக்கவள். ஒருநாள் மின்னும் விளக்குகளில் டிஸ்கோ நடனம் ஆடவேண்டுமென்று விரும்புகிறாள். அங்கே யூசுப் என்பவனைச் சந்திக்கிறாள். ஆனால் அன்றைய அவளது வாழ்க்கையில் ஏதோ ஒன்று அவள் றெக்கைகளை உடைக்கிறது. நைட்கிளப்புக்கு வெளியே யூசுப் என்பவனோடு பேசிக்கொண்டிருக்கையில் மூன்று போலீஸ்காரர்கள் அவளை கடற்கரையில் சந்திக்கிறார்கள். ஒரு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடும்போது, அவர்கள் யூசுஃப்பிடமிருந்து பணம் பறித்துக்கொண்டு மறியத்தை கற்பழித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். மயக்கமும் வலியும் இருந்தபோதிலும் தன் உடலிலுள்ள கற்பழித்த கறைகளையே சான்றுகளாக்கி அது மறைவதற்குள் போய் அதிகார துஷ்பிரயோகம் செய்த அவர்கள் மீது புகாரை பதிவு செய்துவிட விரும்புகிறாள். அதில் அவள் பிடிவாதமாக இருக்கிறாள். அவளது விடாமுயற்சிக்கு உரிய நீதியை நோக்கி சட்டப்பூர்வமான வழக்காக அது மாறுகிறது.

மாலை 7.15 மணி | CHAPLIN IN BALI / UN VOYAGE EN ORIENT | DIR: RAPHAEL MILLET | FRENCH | 2017 |52'

ஐரோப்பாவில் சிட்டி லைட்ஸ் திரைப்பட திரையிடல்களுக்கு ஏற்பாடுகளை முடித்துக்கொண்டு திரும்பவேண்டிய சார்லி சாப்ளின் ஹாலிவுட் திரும்பவில்லை. மாறாக, தனது சகோதருடன் ஆஸ்திரேலியா செல்கிறார். அங்குள்ள பாலித் தீவுக்குச் சென்று சேர்கிறார். இந்தத் தீவு உண்மையிலேயே சொர்க்கத்தைப் போன்றது. இங்குள்ள இயற்கையெழில் அம்சங்கள் உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காதது. அதன் குடிமக்களின் அமைதியானவாழ்க்கை அவரை மிகவும் கவர்கிறது. அவர்களின் நடனங்கள் புத்துணர்ச்சி மற்றும் உத்வேகத்தை அளிக்கின்றன. அந்த மக்களின் வாழ்க்கையை இயற்கைக் காட்சிகளை தனது கேமராவுக்குள் தனது சகோதரரின் உதவியுடன் படம்பிடிக்கிறார். அங்குதான் அவருக்கு ஒலியைப் பற்றிய பயம் விலகுகிறது. இதற்கு பாலி மிகப்பெரிய உதவிகரமாக அமைந்திருந்தது அவருக்கு. அங்கு கிடைத்த மக்களின் வாழ்க்கையை முறையும் இயற்கை எழில் ஒலிகளும்தான் அவர் மாடர்ன் டைம்ஸ் திரைப்படம் எடுக்க உந்துதலாயிருந்தது என்பதை நம்புவது சற்று சிரமம்தான். ஆனால் அதுதான் உண்மை. தனது முதல் படத்தில் தான் பேசுவதைவிட பாடுவது நல்லது என்று எண்ணினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x