Published : 17 Dec 2017 06:26 PM
Last Updated : 17 Dec 2017 06:26 PM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.18 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை (டிசம்.18) தேவிபாலா திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.15 மணி | CRACKS IN THE SHELL/ DIE UNSICHTBARE | DIR: CHRISTIAN SCHWOCHOW | GERMAN / DANISH / CHINESE| 2011 | 133'

ஃபைன் திறமையான நடிப்பு மாணவி. ஆனால் கூச்சமுடையவள். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரி ஜூலை பார்த்துக் கொள்ள, அவளை தூங்க வைக்க பாடுவது, ஆடுவது, நடிப்பது என தனது திறமைகளை பயன்படுத்துகிறாள். ஆனால் பள்ளியிலோ அவள் தன்னம்பிக்கையின்றி இருக்கிறாள். புகழ்பெற்ற இயக்குநர் காஸ்பெர் ஃபீர்ட்மென் தனது அடுத்த படத்துக்கான நடிகர் தேர்வை வைக்கிறார். ஃபைன் தனது திறமையால் அவரை ஈர்க்கிறாள். ஃபைனின் பாதிக்கப்பட்ட ஆளுமையும், குணமும், தனது அடுத்த படைப்பின் மைய கதாபாத்திரத்தைப் போலவே இருப்பதாக காஸ்பர் நினைக்கிறார். ஃபைனுக்கு அந்த பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், ஃபைன் நடிப்புக்காக தனது அடையாளத்தையே இழந்து அந்த பாத்திரமாகவே மாறுகிறாள். இது அவளது சகோதரியை பார்த்துக் கொள்வதிலும் எதிரொலிக்கிறது. இந்த ஆபத்தான விளையாட்டில் ஃபைனுக்கு, ஃபைனே எதிரியாக மாறுகிறாள்.

பிற்பகல் 2.15 மணி | GOODBYE KATHMANDU | DIR: NABINSUBBA | NEPALI | 2011 | 113'

2004 ஆம் ஆண்டின் உள்நாட்டு யுத்தத்தின் போது காத்மண்டு, நேபாளத்தில் வசிக்கும் மூன்று இளைஞர்களின் கதையை இந்த படம் கூறுகிறது. மாவோயிச கிளர்ச்சியாளர்கள் அரசாங்கப் படைகளுடன் போரிடுகையில், மக்களுடைய வாழ்வாதாரங்கள் மோசமாக மாறியுள்ளன. நேபாளத்தின் மற்ற பகுதிகளிலிருந்து காட்மண்டுவிற்கு இடம்பெயரும் மக்கள் பெரும் சிக்கலுக்குள்ளாகிறார்கள்.

மாலை 4.45 மணி | OCEAN IN A DROP | DIR: ANDREW GARTON | AUSTRALIA / HINDI | 2017 |75'

ஊரகப் பகுதிகளிலும் பழங்குடியினர் சமூகத்திலும் இணையதளங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றி கூறுகிறது இத்திரைப்படம். இதுஒரு அமைதியான புரட்சி. அரசாங்கங்கள் தூக்கியெறியப்படுவதில்லை, ஆனால் இன்னும் நீண்டகால மற்றும் நுட்பமான மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள முங்காஸ்கா கிராமத்தில் லேப்டாப் மற்றும் இணையதள தொடர்புகள் வந்தபிறகு வீட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளார்கள். இத்திரைப்படம் முதலாளிகள், சாதித் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என மாற்றங்களைக் கொண்டுவரவேண்டிய இவர்களிடம் தாக்கம் செலுத்தியுள்ள இந்தியாவின் சொந்த இணையதள புதிய பரிசோதனை முயற்சிகளைப் பற்றியது.

மாலை 7.15 மணி | KATIE SAYS GOODBYE | DIR: WAYNE ROBERTS | ENGLISH | 2016 | 88'

கேட்டீ, ஓர் இளம் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்த பெண். சான் பிரான்சிஸ்கோவில் வாழ்வது குறித்த கனவை அவள் காண்கிறாள். தன் முதல் காதலோடு வாழ்கிறாள். ஆராய்ந்து நேர்மையாய் தன்னைத்தானே நிராகரிக்கிறாள். கஷ்டப்படும் மற்றவர்களுக்கா இரங்கும் அவளது குணமே அவளை எளிதாக இரையாக்கிவிடுகிறது. அவளது விடாமுயற்சியும் மற்றும் இளமையும் அவள் மிகவும் நேசிப்பவர்களால் மிகவும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x