Published : 31 Dec 2017 07:24 PM
Last Updated : 31 Dec 2017 07:24 PM

நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் காலமானார்

முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். அவருடைய தந்தை வினோத் ராஜ். 'கில்லி', 'திருப்பாச்சி' உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவரது மனைவியின் பெயர் ராஜேஸ்வரி வினோத். இவர்களுக்கு விக்ரம், அரவிந்த் மற்றும் அனிதா என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.

வினோத் ராஜ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று மாலை 4 மணியளவில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலக நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும், வினோத் ராஜுடன் நடித்தவ பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது உடல் அடக்கம் திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x