Published : 15 Dec 2017 04:14 PM
Last Updated : 15 Dec 2017 04:14 PM

சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.16 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் சனிக்கிழமை (டிசம்.16) கேஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.45 மணி | LIFE IS LOVELY / YASAMAK GUZEL SEY | DIR: MUFIT CAN SANCINTI | TURKISH | 2017 | 105'

சமுதாயத்தில் வாழ்க்கை நெறிமுறைகளையும் அறத்தையும் பற்றிய கேள்வி எழுப்பும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில்தான் அவர் கேள்வியை எழுப்புகிறார். வாழ்க்கை நெறிமுறைகள் சார்ந்த ஆழமான புரிதலை மட்டுமல்ல சூழலியல் சார்ந்த ஒரு தேவையையும் இப்படம் பேசுகிறது. எந்த தத்துவ பின்புலமும் இன்றி தனது செயல்கள் வாயிலாகவே தனது கருத்துக்களை சொல்கிறார். வாழ்க்கையின் அழகை தேடிக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்துவிட்டு தனது மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்வதுதான் சரியானது என உணர்கிறார். தனது தாயிடமிருந்து விலகிச் செல்லாமல் அவரோட இருக்க என்ன வழி என்று முடிவெடுப்பதும் இதில் அடங்கும். தனது தந்தையிடம் சொல்வதை அவர் எப்படி எடுத்துக்கொள்கிறார், முதல் நாள் வாழ்க்கையில் சந்தித்ததுபோலவே மனைவியை நடத்துகிறார். அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் அவளை காதலித்தது, அப்போது அவனது உண்மையான பிறந்தநாளை அவள் சொல்ல, தான் நொறுக்கப்பட்ட அனுபவத்தைப் பற்றி கூறுகிறார். முஃப்பித் நீண்டநாட்களாக காத்திருந்த விடுமுறைக்கு தன் மகளோடும் மனைவியோடும் வெளியே செல்கிறார். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிமுறைகள் என்ன அது உன்னுள்ளேயே இருக்கிறது என்கிறார்.

பகல் 12.15 மணி | BLOODY MILK / PETIT PAYASAN | DIR: HUBERT CHARUEL | FRENCH | 2017 |90'

பியர், ஒரு முப்பத்தி ஐந்து வயதான விவசாயி, அவரது பெற்றோர் நடத்திக்கொண்டிருந்த பால்பண்ணையை எடுத்து நடத்துகிறார். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் அவரது பசுக்களுடன்தன் தன் நேரத்தை அர்ப்பணிக்கிறார். திடீரென ஒரு தொற்றுநோயினால் மாடுகள் தாக்கப்பட்டுவிட்டதாக உணர்கிறார். மந்தை முழுவதுமே அவருக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன. இதனால் மனக்கவலையோடு அவற்றை கவனிக்கத் தொடங்குகிறார். அவரது சகோதரி பாஸ்கேல், கால்நடை மருத்துவரான அவரது சகோதரி பாஸ்கேல், ''எல்லா மாடுகளும் நன்றாகவே உள்ளன. தேவையற்ற கவலைகளை விட்டுவிடு'' என ஆறுதல் அளிக்கிறார். துரதிஷ்டவசமாக, ஒரு மாடு தொற்றில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. பியருக்கு இந்த அச்சம் மேலும் அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒரு மாட்டுக்கு தொற்றுநோய் வந்தாலும் மொத்த மந்தையையும் வெட்ட வேண்டும். ஆனால் பியர் பிரச்சனையை, அதுவரை போகவிடவில்லை.

பிற்பகல் 2.45 மணி | HEARTSTONE / HJARTASTEINN | DIR: GUOMUNDUR AMAR GUOMUNDSSON |ICELANDIC | 2016 | 129'

ஐஸ்லாந்தில் ஒரு தொலைதூர மீன்பிடி கிராமம். டீனேஜ் பையன்கள் தோர் மற்றும் கிறிஸ்டியன் அனுபவத்தில் ஒரு கொந்தளிப்பான கோடைக் காலம், ஒரு பெண்ணின் இதயத்தை வென்றெடுக்க முயற்சிக்கும் போது, மற்றவர் தனது சிறந்த நண்பருடன் புதிய உணர்ச்சிகளைக் கண்டுபிடிக்கிறார். கோடை முடிவடைய நேரம் வருகிறது. ஐஸ்லாந்தின் கடுமையான குளிர் உருவாவதற்கான தட்பவெட்பநிலையில் ஐஸ்லாந்தின் இயற்கைச் சூழல் சற்றே மாறத் தொடங்குகிறது. அந்த பருவமாற்றத்தின்போது, இந்த பையன்கள் அந்த விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியேறவும், முதிர்ச்சியை எதிர்கொள்ளவுமான காலமாக அமைகிறது.

மாலை 5.00 மணி | CHAPLIN IN BALI / UN VOYAGE EN ORIENT | DIR: RAPHAEL MILLET | FRENCH | 2017 |52'

ஐரோப்பாவில் சிட்டி லைட்ஸ் திரைப்பட திரையிடல்களுக்கு ஏற்பாடுகளை முடித்துக்கொண்டு திரும்பவேண்டிய சார்லி சாப்ளின் ஹாலிவுட் திரும்பவில்லை. மாறாக, தனது சகோதருடன் ஆஸ்திரேலியா செல்கிறார். அங்குள்ள பாலித் தீவுக்குச் சென்று சேர்கிறார். இந்தத் தீவு உண்மையிலேயே சொர்க்கத்தைப் போன்றது. இங்குள்ள இயற்கையெழில் அம்சங்கள் உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காதது. அதன் குடிமக்களின் அமைதியானவாழ்க்கை அவரை மிகவும் கவர்கிறது. அவர்களின் நடனங்கள் புத்துணர்ச்சி மற்றும் உத்வேகத்தை அளிக்கின்றன. அந்த மக்களின் வாழ்க்கையை இயற்கைக் காட்சிகளை தனது கேமராவுக்குள் தனது சகோதரரின் உதவியுடன் படம்பிடிக்கிறார். அங்குதான் அவருக்கு ஒலியைப் பற்றிய பயம் விலகுகிறது. இதற்கு பாலி மிகப்பெரிய உதவிகரமாக அமைந்திருந்தது அவருக்கு. அங்கு கிடைத்த மக்களின் வாழ்க்கையை முறையும் இயற்கை எழில் ஒலிகளும்தான் அவர் மாடர்ன் டைம்ஸ் திரைப்படம் எடுக்க உந்துதலாயிருந்தது என்பதை நம்புவது சற்று சிரமம்தான். ஆனால் அதுதான் உண்மை. தனது முதல் படத்தில் தான் பேசுவதைவிட பாடுவது நல்லது என்று எண்ணினார்.

மாலை 7.00 மணி | A BEAUTIFUL STAR / UTSUKUSHIIHOSHI | DIR: DAIHACHI YOSHIDA | JAPANESE | 2017 | 127'

"ஒரு அழகான நட்சத்திரம்" வெளிப்படையாக வேடிக்கையான ஆனால் உண்மையில் தீவிரமான, கூட மனித சோதனையை பற்றி இருண்மையைக் கொண்டுள்ளது. யுகியோ மிஷிமா 1962 ஆம் ஆண்டின் நாவலை அடிப்படையாகக் கொண்டது, நகைச்சுவை மிக்கது. ஒரு அறிவியல் புனைகதையான இப்படத்தில் உள்ளவர்கள் வேற்று கிரகங்களிலிருந்து வருகிறார்கள். நாவலில், பனிப்போர் யுகத்தின் அணுவாயுதங்களைப் பற்றிய அச்சங்களை பிரதிபலித்தது. யோஷ்தாவின் இப்படத்தில் அதைப்போலவே, சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் படத்தில் வரும் கதை மாந்தர்கள் அனைவரும் வேற்று கிரகத்திலிருந்து வந்ததுபோல சித்தரித்திருப்பது ஒரு நகைச்சுவையாக வெளிப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x