Last Updated : 08 Dec, 2017 04:35 PM

 

Published : 08 Dec 2017 04:35 PM
Last Updated : 08 Dec 2017 04:35 PM

தமிழ்படம் 2.O படக்குழுவினர் யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'தமிழ்படம் 2.O' படத்தில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

2010-ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'தமிழ்ப் படம்'. அதற்கு முன்பாக வெளியான தமிழ்ப் படங்களின் காட்சிகளை கிண்டல் செய்து இப்படத்தின் காட்சிகளை அமைத்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அதன் 2-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் படப் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. நாயகனாக சிவா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அவர்களோடு சதீஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், அஜய் ரத்னம் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள்.

'தமிழ்படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதனே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். சந்துரு வசனம், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, கண்ணன் இசை, சுரேஷ் எடிட்டர், கலை இயக்குநராக செந்தில்ராகவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். மதன் கார்க்கி, தியாகு, சந்துரு, சி.எஸ்.அமுதன ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள். சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனும், நடன இயக்குநராக கல்யாணும் பணிபுரிய இருக்கிறார்கள். சஷிகாந்த் தயாரித்து வருகிறார்.

அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்கவும் உள்ளது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x