Published : 18 Dec 2017 05:38 PM
Last Updated : 18 Dec 2017 05:38 PM

சென்னை சர்வதேச திரைப்பட விழா: மாணவர் பக்கம் - மிஸ்டர் ஸ்டெயின் கோஸ் ஆன்லைன் (Mr. Stein Goes Online)

15வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் 15.12.17 அன்று திரையிடப்பட்டது மிஸ்டர் ஸ்டெயின் கோஸ் ஆன்லைன் (Mr. Steing Goes Online) என்ற பிரெஞ்சு மொழிப்படம்.

கதை சுருக்கம்

75 வயதான முதியவராய் வரும் பைரி தன்னுடைய மனைவி இறந்த வருத்தத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார். அதனால் பைரியின் தனிமையைப் போக்க அவர் மகளான சில்வி அவரிடம் மடிக்கணினி ஒன்றை இணையதள இணைப்புடன் SKYPE (ஸ்கைப் மூலம்  பேச) ஏற்றித் தருகிறார்.  அதை பைரிக்கு கற்றுத் தருமாறு பைரியின் பேத்தியினுடைய காதலன் அலெக்ஸிடம் கூறுகிறார்.

பின்நாளில் அலெக்சின் புகைப்படத்தை பயன்படுத்தி ஸ்கைப்பில் ஓர் இளம் வயது பெண் உடன் பேசுகிறார் பைரி. அவ்வப்போது அந்த பெண் நேரில் பைரியை காண அழைக்க, அதனால் வரும் குழப்பங்கள், விளைவுகள் இவற்றை பற்றி சொல்லியிருக்கும் படமே மிஸ்டர் செடயின் கோஸ் ஆன்லைன்.

பார்வை

தன் இறந்த மனைவியை நினைத்துப் பார்க்கும்போது உள்ள பைரிக்கும் ஆன்லைனில் காதல் வயப்பட்டபின் உள்ள பைரிக்கும் துளியும் ஒற்றுமை இல்லை. வேறோரு ஆளாக நடை, உடை, பாவனை என்ற அனைத்தையும் மாற்றி நடித்துள்ள விதம் வியப்பாக இருந்தது.

இந்த படம் ரொமான்ஸ் காமெடி வகையில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பைரிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவிற்கு அலெக்ஸ் கதாபாத்திரத்தில் வரும் யானிஸ் லஸ்பர்ட்க்கும் முக்கியத்துவம் உள்ளது. ப்ளோரா கதாப்பாத்திரத்தில் வரும் பெனி வெலட் தன்னை ஏமாற்றியது தெரிந்ததும் கோபப்படும் காட்சிகளில் நடித்த விதம் அருமை.

படம் முதலில் மெதுவாக அரம்பித்தாலும் போகப் போக எவ்வாறு முடிய போகிறது என்ற ஆர்வத்தை நம் மனதில் தோற்றுவிக்கிறார், இயக்குநர் ஸ்டிப்பன் ராப்பிளின். படத்தின் ஓட்டம் பொறுமையாக இருப்பினும் நம்மை சோர்வடையச் செய்யாமல் இருக்கிறது.

பைரி தன் மனைவி போல உள்ள வேறோருவரை துணையாக்கி கொள்கிறாரா இல்லையா என்பதே படத்தின் கரு. படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் முகம் சுளிக்க வைக்கின்றன.பைரியின் கதாபாத்திரத்தை நாம் எளிமையாக நம்முடன் இணைத்துக் கொள்ள முடிகிறது. நமக்குத் தெரிந்து மிகவும் நெருக்கமாய் இருந்த துணையை இழந்த முதியவர்களை இப்படத்தின் காட்சிகள் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

அலெக்ஸ் ப்ளோராவுடன் ரொமான்ஸ் செய்யும்போது பைரி முகத்தில் உள்ள ஏக்கம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. படத்தின் இறுதியில் உள்ள திருப்பம் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. படத்தில் ஆரம்பத்தில் காட்டிய காட்சியை இறுதி காட்சியுடன் ஒப்பீடுள்ள விதம் நன்றாக பொருந்தியிருந்தது.

ரொமான்ஸ் காட்சிகளிலும், உணர்வுபூர்வமான காட்சிகளிலும் வெள்டிமர் காஸ்மோவின் பின்னனி இசை அந்த காட்சிகளை மேலும் மெருகேற்றியுள்ளது. படத்தில் பைரியின் மனநிலை மாற்றத்தை கலர் டோன் முலம் மாற்றி காண்பித்த விதம் பாராட்டுக்குரியது.இப்படத்தின் நகைச்சுவை காட்சிகளைப் பார்க்கும்போது கமல்ஹாசன் நடித்த ’பஞ்சதந்திரம்’ ஞாபகத்திற்கு வந்தது.

மொத்தத்தில் துணைத் தேடிக்கொள்ள வயது முக்கியமில்லை என்பதை உணர்த்தும் படமே மிஸ்டர் ஸ்டெயின் கோஸ் ஆன்லைன்.

*இந்த விமர்சனம் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தே

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x