Published : 13 Aug 2023 01:12 PM
Last Updated : 13 Aug 2023 01:12 PM

நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாளை கவுரவித்த கூகுள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 60ஆவது பிறந்த நாளையொட்டி டூடூல் வெளியிட்டு கூகுள் நிறுவனம் கவுரவித்துள்ளது. இதனை மும்பையைச் சேர்ந்த பூமிகா முகர்ஜி என்பவர் வடிவமைத்துள்ளார்.

1963-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த ஸ்ரீதேவி தனது 4ஆவது வயதிலேயே ‘துணைவன்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக கடவுள் முருகனாக நடித்திருப்பார். ‘கந்தன் கருணை’, ‘ஆதி பராசக்தி’, ‘நம் நாடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜிகணேசன் ஆகியோருடன் நடித்த பெருமை ஸ்ரீதேவிக்கு உண்டு.

70களில் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி- காம்போ படங்கள் ஹிட்டடித்தன. மக்களால் கொண்டாடப்பட்டன. தனது 13ஆவது வயதில் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஹீரோயினாக தடம் பதித்தார் ஸ்ரீதேவி. ‘16 வயதினிலே’ படத்தில் மயிலி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ‘மூன்றாம் பிறை’ படத்தில் அவரின் நடிப்பு இன்றும் பாராட்டப்படுகிறது.

‘ஹிம்மத்வாலா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தேசிய அளவிலான நடிகையாக ஸ்ரீதேவி உயர்ந்தார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பான் இந்தியா நடிகையாக வலம் வந்தவர், 2017-ம் ஆண்டு வெளியான ‘MoM’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்தப்படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டே 2018-ல் காலமானார்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் எனப்படும் சிறப்பு சித்திரத்தை வெளியிட்டு அவரை கவுரவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x