Last Updated : 27 Nov, 2017 02:06 PM

 

Published : 27 Nov 2017 02:06 PM
Last Updated : 27 Nov 2017 02:06 PM

ஹாக்கி வீரராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஹிப் ஹாப் ஆதி

 'மீசையமுறுக்கு' படத்தைத் தொடர்ந்து ஹாக்கி வீரராக புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் 'ஹிப் ஹாப்' ஆதி

சுந்தர்.சி தயாரிப்பில் வெளியான 'மீசையமுறுக்கு' படத்தின் மூலம் நாயகன் மற்றும் இயக்குநராக அறிமுகமானார் இசையமைப்பாளர் 'ஹிப் ஹாப்' ஆதி. இப்படத்திற்கு வசூல் ரீதியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் தங்களுடைய படங்களில் நாயகனாக நடிக்க வைக்க 'ஹிப் ஹாப்' ஆதியை அணுகி வந்தார்கள். ஆனால், அவர் தனது அடுத்த படத்தைத் தேர்வு செய்ய பொறுமை காட்டி வந்தார்.

இந்நிலையில் தற்போது புதுமுக இயக்குநர் ஒருவர் கூறிய கதையொன்று பிடித்துவிடவே ஒப்பந்தமாகியுள்ளார். 'மீசையமுறுக்கு' படத்தை தயாரித்த சுந்தர்.சியே இப்படத்தையும் தயாரிக்க முன்வந்திருக்கிறார்.

இதில் ஹாக்கி வீரராக நடிக்க வேண்டும் என்பதால், தற்போது ஹாக்கி விளையாட்டு வீரர்களுடன் பயிற்சி எடுத்து வருகிறார் 'ஹிப் ஹாப்' ஆதி. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிசம்பரில் வெளியிடவுள்ளது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x