Published : 01 Aug 2023 04:14 PM
Last Updated : 01 Aug 2023 04:14 PM

தனுஷ் படத்தில் அனிகா சுரேந்திரனுக்கு முக்கியக் கதாபாத்திரம்

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் நடிகை அனிகா சுரேந்திரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை அவரே இயக்குகிறார். படத்தில் தனுஷின் சகோதரராக சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாகவும், எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், தமிழில் ‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அவர் துஷாரா விஜயனின் தங்கையாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x