Published : 24 Nov 2017 08:17 PM
Last Updated : 24 Nov 2017 08:17 PM

அசோக்குமார் கரங்களால் ஆரம்பிக்க வேண்டிய படம் தொடங்கப்படாமல் போய்விட்டது: சீனுராமசாமி வேதனை

தயாரிப்பாளர் அசோக்குமார் கரங்களால் தொடங்கப் பெற்றிருக்க வேண்டிய படம் தொடங்கப்படாமல் போய்விட்டது வேதனை அளிக்கிறது என்று இயக்குநர் சீனுராமசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ''சசிகுமாரும் நானும் இணைந்து ஒரு படம் வேலை செய்ய வேண்டும் என்று மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் தனது வாழ்த்துகளையும் சொல்லி அனுப்பி வைத்த அசோக்குமார் தற்கொலை ஜீரணிக்க முடியாத வேதனை. ஏனென்றால் நான் தர்மதுரை படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் மனைவியை விட்டுப் பிரிந்து இருந்த என் தம்பி சதீஷ் இதே போல் தூக்கிட்டு இறந்தான். அவன் நினைவு வராத நாளே எனக்கு இல்லை.

நான் தயாரிப்பாளர் இல்லை.அதேபோல் வட்டிக்கு வாங்கிப் படம் எடுக்கும் தைரியமும் எனக்கு இல்லை. மற்றபடி நான் இடதுசாரி கொள்கைகளில் தீவிரப் பற்று உடையவன். எனக்கு சாதி, மதம்... அந்த எண்ணமே இல்லை. தயாரிப்பாளர் அசோக்குமார் கரங்களால் தொடங்கப் பெற்று இருக்க வேண்டிய படம் தொடங்கப்படாமல் போய்விட்டது வேதனை அளிக்கிறது.

எப்படிப் பார்த்தாலும் உயிர் பிரிவு, உறவுப் பிரிவு, மறக்க முடியாத நினைவுகள் இவற்றில் இருந்து சசிகுமார் மீண்டு வந்து வெற்றிகரமாக வலம் வர வேண்டும் என்பதே இந்த நாளில் நான் முன் வைக்கும் பிரார்த்தனை'' என்று சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எம்.ஜி.ஆர், சிவாஜி, போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாகச் சித்தரிக்கப்பவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே என்று சீனுராமசாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x