Last Updated : 03 Nov, 2017 05:01 PM

 

Published : 03 Nov 2017 05:01 PM
Last Updated : 03 Nov 2017 05:01 PM

டிசம்பர் 1-ம் தேதி அருவி வெளியீடு: படக்குழு அறிவிப்பு

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'அருவி' திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

'ஜோக்கர்', 'காஷ்மோரா', 'கூட்டத்தில் ஒருத்தன்' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தயாரிப்பவர் எஸ்.ஆர்.பிரபு. அவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'.

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா மற்றும் மும்பை, பஞ்சாப், டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு, விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் சென்னையில் சிலருக்கு திரையிட்டு காட்டியுள்ளார்கள். அவர்களும் படக்குழுவை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.

சமூகப் பிரச்சினைகளை ஒரு பெண்ணின் பார்வையில் கூறும் இப்படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x