Published : 22 Jul 2023 08:55 AM
Last Updated : 22 Jul 2023 08:55 AM

Oppenheimer | பாலுறவு காட்சியில் பகவத் கீதை வரிகள்: இந்திய சென்சார் வாரியத்துக்கு குவியும் கண்டனம்

மும்பை: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தில் பாலுறவு காட்சிகளின் போது பகவத் கீதை வரி இடம்பெற்றதையடுத்து இந்திய சென்சார் வாரியத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

‘அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இப்படம் நேற்று (ஜூலை 21) உலகம் முழுவதும் வெளியானது. ‘உலகங்களை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்’ என்று வரும் பகவத் கீதை வரி இப்படத்தின் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், படத்தின் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில் இந்த வரிகள் இடம்பெறுகின்றன. இதற்கு சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். R ரேட்டட் படமான இதில் இடம்பெற்ற பல காட்சிகள் வெட்டப்பட்டு இந்தியாவில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும் மேற்சொன்ன காட்சியை கத்தரிக்காமல் விட்டது ஏன் என்று சென்சார் வாரியத்துக்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x