Published : 19 Jul 2023 11:33 AM
Last Updated : 19 Jul 2023 11:33 AM

‘அவன் கையில இன்னும் நீ மாட்டல...’ - ‘துருவ நட்சத்திரம்’ 2-வது சிங்கிள் எப்படி?

சென்னை: விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘His Name Is John’ பாடல் வெளியாகியுள்ளது.

விக்ரமை வைத்து இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் இயக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா நடித்துள்ள இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால், படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தெரியாமல் இருந்தது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட பதிவில், “துருவ நட்சத்திரம் படத்துக்கான பின்னணி இசைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ’ஹிஸ் நேம் இஸ் ஜான்’ என்று தொடங்கும் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை பால் டப்பா என்பவர் எழுதி பாடியுள்ளார். 3.53 நிமிடம் ஓடக்கூடிய இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘அவன் போறான் ஃப்ளைட்டுல... இப்போ பறந்துபுட்டான் ஹைட்டுல... உன்ன போட போறான் காட்டுல... அவன் கையில இன்னும் நீ மாட்டல...’ என ஒலிக்கும் வரிகள் ஈர்க்கின்றன. ராப் வடிவில் ஹாரிஸின் துள்ளலான இசையுடன் உருவாகியுள்ள இப்பாடலின் நடுவில் வரும் எலக்ட்ரானிக் இசை, படத்தில் விக்ரமுக்காக அமைக்கப்பட்டுள்ள மாஸ் காட்சிகளில் பயன்படுத்தப்படலாம். ’ஹிஸ் நேம் இஸ் ஜான்’ லிரிக்கல் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x