Published : 15 Jul 2023 06:15 PM
Last Updated : 15 Jul 2023 06:15 PM

‘‘இங்க நான் தான் கிங்” - ரஜினியின் ‘ஜெயிலர்’ 2-வது சிங்கிள் ப்ரோமோ வீடியோ

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Hukum’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Kaavaalaa’ பாடல் கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார். அருண்ராஜா காமாராஜா பாடலை எழுதியிருந்தார்.ஷில்பா ராவ், அனிருத் இணைந்து பாடியிருந்தனர். இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Hukum’ ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வீடியோவை பொறுத்தவரை, ‘‘ஹேய்.. இங்க நான் தான் கிங்கு.. நான் வைச்சது தான் ரூல்ஸ். அத என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன். அத கப்சிப்னு கேட்டு ஃபாலோ பண்ணணும். அத விட்டுட்டு அடாவடித்தனம் பண்ணா கண்டதுண்டமா வெட்டி கலைச்சு போட்ருவேன்” என ரஜினியின் பின்னணி குரல் ஒலிக்க அடுத்து மாஸாக நடந்து வரும் காட்சிகள் காட்டப்படுகின்றன. இந்த ப்ரோமா இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான எதிர்பாரப்பை அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x