Published : 14 Jul 2023 07:24 PM
Last Updated : 14 Jul 2023 07:24 PM

உணவு டெலிவரி ஊழியர்களின் வலியும் வேதனையும் - ‘அநீதி’ ட்ரெய்லர் எப்படி?

வசந்தபாலன் இயக்கியுள்ள ‘அநீதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

‘ஜெயில்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ‘அநீதி’. இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் தலைப்பு கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - படம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் வலி குறித்து பேசுவதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. அத்துடன் தனியார்மயமாக்கல் குறித்த அழுத்தமான வசனங்களும் இடம்பெற்றுள்ளன. உணவு டெலிவரி ஊழியர்களின் போராட்டம், நிச்சயமற்ற வேலை, வாடிக்கையாளர்கள் அவர்களை நடத்தும் விதம் என காட்சிகள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு படத்துக்கான அறிமுகத்தை கொடுக்கின்றன.

தொடர்ந்து ரத்தமும் சதையுமாக விரியும் ஆக்‌ஷன் காட்சிகள், நாயகனின் விரக்தியை வெளிப்படுத்தும் காட்சிகள் என அழுத்தமாக வெளியாகியுள்ளது ட்ரெய்லர். படம் வரும் ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x