Published : 05 Jul 2023 06:38 PM
Last Updated : 05 Jul 2023 06:38 PM

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தனுஷ் நடிக்கும் படத்தை அவரே இயக்க உள்ளார். ‘D50’ என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை அவரே இயக்குகிறார். படத்தில் தனுஷின் சகோதரராக சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாகவும், எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x