Last Updated : 09 Oct, 2017 11:56 AM

 

Published : 09 Oct 2017 11:56 AM
Last Updated : 09 Oct 2017 11:56 AM

இந்தியன் 2வுக்கு முன்பு சபாஷ் நாயுடு: கமல் திட்டம்

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக 'சபாஷ் நாயுடு' படத்தை முழுமையாக முடிக்க கமல் திட்டமிட்டுள்ளார்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனது படத்தின் வேலைகளில் தீவிரமாகி விட்டார் கமல். தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து 'சபாஷ் நாயுடு' படத்தைத் தொடங்க முடிவு செய்திருக்கிறார் கமல். இதன் 60% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. காலில் அடிபட்டதைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது அதன் நடிகர்கள் அனைவரிடமும் பேசி, மீண்டும் தேதிகள் பெற்று படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்திருக்கிறார் கமல்.

இவ்விரண்டு படங்களை முடித்துவிட்டு, முழுமையாக 'இந்தியன் 2'வில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் கமல். ஏனென்றால் இதுவரை கமல் நடித்து வெளியான படங்களை விட, அதிக பொருட்செலவில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

'2.0' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், மறுபுறம் 'இந்தியன் 2' படத்தின் கதைகளத்துக்கு இறுதிவடிவம் கொடுத்து வருகிறார் ஷங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x