Published : 07 Jun 2023 08:09 PM
Last Updated : 07 Jun 2023 08:09 PM

கலகலப்பான காதல் களம் - ‘எல்ஜிஎம்’ டீசர் எப்படி?

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் டீசரை எம்.எஸ்.தோனி மற்றும் சாக்‌ஷி தோனி இணைந்து வெளியிட்டுள்ளனர்.

கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் தோனி. அப்படி அவர் திரைத் துறையிலும் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரிப்பதாக அறிவித்தது.தோனிக்கும், சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனி பிணைப்பு உள்ளதால், தனது புரொடக்‌ஷனில் உருவாகும் முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்து, இந்த அறிவிப்பு வெளியானது.

அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று அண்மையில் முடிந்தது. இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசரை எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி இணைந்து வெளியிட்டுள்ளனர்.

டீசர் எப்படி? - கதாபாத்திர அறிமுகமாவே இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஹரீஷ் கல்யாண், இவானா, வெங்கட்பிரபு, விடிவி கணேஷ், ஆர்ஜே விஜய் என எல்லோருக்கும் ஒரு டயலாக் கொடுக்கப்பட்டுள்ளது. டீசரை பொறுத்தவரையில் படம் காதலை மையமாக வைத்த கலகலப்பான கதையம்சம் கொண்டதாக இருப்பதை உணர முடிகிறது. ஹரிஷ் கல்யாண் தாயாக நதியா நடித்துள்ளார். இறுதியில் வரும் யோகிபாபுவுக்கான காட்சி சர்ப்ரைஸ். படம் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x