

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப் பிரிவுகளில் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 5-ம் தேதி நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், புவியியல், வரலாறு, உளவியல், அரசியல் அறிவியல், சிறப்பு கல்வியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் உதவிப் பேராசிரியர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கு உரிய கல்வித்தகுதியும், பணி அனுபவமும் வாய்ந்த உதவிப் பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) அறிந்துகொள்ளலாம்.
சம்பளம் தொகுப்பூதியமாக மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான நேர்முகத் தேர்வு சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் ஜனவரி 5-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.