டிச.24-ல் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

டிச.24-ல் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
Updated on
1 min read

சென்னை: முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை ஒட்டி வரும் டிச.24-ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் உள்​ளிட்​டோர் மரி​யாதை செலுத்​தவுள்​ளனர்.

இது தொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “அதி​முக​ நிறு​வனத் தலை​வர் எம்​ஜிஆர் 1987-ம் ஆண்டு டிச.24-ம் தேதி அமரர் ஆனார்.

அவரது 38-வது ஆண்டு நினைவு நாளான வரும் டிச.24-ம் தேதி காலை 10 மணிக்​கு,சென்​னை, மெரினா கடற்​கரை​யில் உள்ள எம்​ஜிஆர் நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பங்​கேற்​று,மலர் வளை​யம் வைத்​து, மலர்​தூவி மரி​யாதை செலுத்த உள்​ளார்.

இந்​நிகழ்ச்​சிகளில் அனை​வரும் கலந்​து​கொள்ள வேண்​டும்”என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வரும் டிச.24-ம் தேதி எம்​ஜிஆர் நினைவு தினத்தை முன்​னிட்​டு, சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள எம்​ஜிஆர் நினை​விடத்​தில் ஓ.பன்​னீர்​செல்​வம், மூத்த தலை​வர் பண்​ருட்டி ராமச்​சந்​திரன் ஆகியோர் மலர் வளை​யம் வைத்​து, மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்த உள்​ளனர்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

மேலும் சசிகலா, டிடிவி தினகரன் உள்​ளிட்​டோரும்​ எம்ஜிஆர் நினைவிடத்தில் மரி​யாதை செலுத்​த உள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது.

டிச.24-ல் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
சென்னை | நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in