பிரதமர் மோடியுடன் வெனிசுலா அதிபர் சந்திப்பு: எரிசக்தி, வர்த்தக உறவை மேம்படுத்த ஆலோசனை

பிரதமர் மோடியுடன் வெனிசுலா அதிபர் சந்திப்பு: எரிசக்தி, வர்த்தக உறவை மேம்படுத்த ஆலோசனை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தியா வந்​துள்ள வெனிசுலா தற்​காலிக அதிபர் டெல்சி ரோட்​ரிக்​ஸ், பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் நேற்​று பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது எரிசக்தி, வர்த்தகம் மற்​றும் முதலீடு ஆகிய துறை​களில் இருதரப்பு உறவு​களை மேம்​படுத்​து​வது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது.

வெனிசுலா அதிப​ராக இருந்த நிக்​கோலஸ் மதுரோ அமெரிக்காவுக்கு எதி​ராக செயல்​பட்​ட​தால், அவரை அமெரிக்க படைகள் வெனிசுலா​வுக்​குள் புகுந்து கைது செய்தது. அமெரிக்க சிறை​யில் இருக்​கும் மதுரோ போதைப் பொருள் கடத்​தல் உட்பட பல வழக்​கு​களை நீதி​மன்​றத்​தில் சந்​தித்து வரு​கிறார். இதைத் தொடர்ந்​து, அந்​நாட்​டின் துணை அதிபர் டெல்சி ரோட்​ரிக்ஸ் தற்காலிக அதிப​ராகப் பொறுப்​பேற்​றார். அவர் நேற்று முன்​தினம் இந்​தியா வந்​தார். டெல்​லி​யில் அவர் பிரதமர் மோடியை சந்​தித்து பேசி​னார்.

அப்​போது எரிசக்​தி, வர்த்​தகம் மற்​றும் முதலீடு ஆகிய துறை​களில் இருதரப்பு உறவு​களை மேம்​படுத்​து​வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த வருகை இந்​தி​யா-வெனிசுலா இடையிலான உறவை மேலும் வலுப்​படுத்​தும் என்று வெளி​யுறவு அமைச்​சகத்​தின் செய்​தித் தொடர்​பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் கூறினார்.

இந்​தியா, வெனிசுலா​வின் கச்சா எண்​ணெயை முன்பு அதி​களவில் (தினமும் 4 லட்சம் பேரல்கள்) இறக்​குமதி செய்து வந்​தது. ஆனால், அமெரிக்​கத் தடைகள் காரண​மாக கடந்த 2020-ல் இந்த கொள்​முதல் நிறுத்​தப்​பட்​டது. மதுரோ கைதுக்​குப்​பின் கச்சா எண்​ணெய் இறக்​கும​திக்கான தடைகள் நீக்​கப்​பட்​டது. அதன் பின்​னர், இந்தியா மீண்​டும் வெனிசுலா​விலிருந்து கச்சா எண்​ணெய் வாங்கத் தொடங்​கியது.

ஈரான் போர் காரண​மாக, வளை​குடா நாடு​களில் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வது தடைபட்​ட​தால், வெனிசுலா​விலிருந்து கச்சா எண்​ணெய் கொள்​முதலை இந்​தியா அதிகரித்தது.

இந்​நிலை​யில் வெனிசுலா தற்​காலிக அதிபர் தனது அமைச்​சர்​கள் குழு​வினருடன் இந்​தியா வந்து இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்தியுள்​ளார். அவருடன் வெளி​யுறவு, பொருளா​தா​ரம் மற்​றும் நிதி, அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பம், தகவல் தொடர்பு மற்​றும் தகவல், மற்​றும் போக்​கு​வரத்து ஆகிய துறை​களின் அமைச்​சர்​கள் உட்பட பல அமைச்​சர்​கள் வந்​துள்​ளனர். அவர்​கள் இந்​தியாவுடனான வர்த்தக உறவை மேம்​படுத்​தும் பேச்சுவார்த்தையில்​ ஈடுபட்​டுள்​ளனர்​.

பிரதமர் மோடியுடன் வெனிசுலா அதிபர் சந்திப்பு: எரிசக்தி, வர்த்தக உறவை மேம்படுத்த ஆலோசனை
தமிழகம் முழுவதும் 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in