இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்: சவுதி, அமெரிக்காவை விஞ்சியது வெனிசுலா

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்: சவுதி, அமெரிக்காவை விஞ்சியது வெனிசுலா
Updated on
1 min read

புதுடெல்லி: உலகளா​விய எரிசக்தி சந்​தை​யில் நில​வும் மாற்​றங்​களுக்கு மத்​தி​யில், விலை குறை​வான வெனிசுலா கச்சா எண்​ணெயை இந்​திய எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிறு​வனங்​கள் அதிக அளவில் கொள்​முதல் செய்​யத் தொடங்​கி​யுள்​ளன.

எரிசக்தி சரக்கு போக்​கு​வரத்து தரவு​களைக் கண்​காணிக்​கும் ‘கெப்​ளர்' நிறு​வனத்​தின் புள்​ளி​விவரங்​களில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: நடப்பு மே மாதத்​தில் மட்​டும் வெனிசுலா​விட​மிருந்து நாள் ஒன்​றுக்கு 4.17 லட்​சம் பேரல் கச்சா எண்​ணெயை இந்தியா இறக்​குமதி செய்​துள்​ளது.

இது கடந்த ஏப்​ரல் மாதத்​தின் (2.83 லட்​சம் பேரல்) அளவை விடப் பெரு​மளவு அதி​க​மாகும். கடந்த ஒன்​பது மாதங்​களாக இந்​தி​யா​விற்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் செய்​யாத நிலை​யில், தற்​போது வெனிசுலா​விட​மிருந்து இறக்​குமதி கிடு​கிடு​வென உயர்ந்​துள்​ளது.

மேற்கு ஆசி​யப் போர் சூழல், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஏற்​பட்​டுள்ள பதற்​றம் ஆகிய​வற்​றால் இந்​தியா தனது இறக்​குமதி உத்​தியை மாற்றி அமைத்​துள்​ளது.

தற்​போது, ரஷ்யா, ஐக்​கிய அரபு அமீரகத்​திற்கு அடுத்​த​படி​யாக வெனிசுலா​விட​மிருந்து தான் இந்​தியா அதிக அளவி​லான எண்​ணெயை கொள்​முதல் செய்​கிறது. இவ்​வாறு கெப்​ளர் புள்​ளி​விவரத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வெனிசுலா​வின் கச்சா எண்​ணெய் இறக்​குமதி அதி​கரிப்​புக்கு அதன் விலை​தான் முக்​கிய காரணம். சர்​வ​தேச சந்​தை​யில் மற்ற எண்​ணெய் வகைகளை விட வெனிசுலா​வின் கச்சா எண்​ணெய் மலி​வாகக் கிடைக்​கிறது.

இது குறித்து ‘கெப்​ளர்’ நிறு​வனத்​தின் தலைமை ஆய்​வாளர் நிகில் துபே கூறுகை​யில், ‘‘பொருளா​தார ரீதி​யான லாபம் மற்​றும் இந்​திய சுத்​தி​கரிப்பு ஆலைகளின் சுத்​தி​கரிப்பு கட்​டமைப்​புக்கு ஏற்​ற​தாக இருப்​ப​தால், இந்​திய நிறு​வனங்​கள் வெனிசுலா எண்​ணெய் மீது அதிக ஆர்​வம்​ காட்​டுகின்​றன’’ என்​றார்​.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்: சவுதி, அமெரிக்காவை விஞ்சியது வெனிசுலா
‘அம்மா உணவக’ அரசியல்... முதல்வர் விஜய் வியூகம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in