பிரான்​ஸில் யுபிஐ சேவை: அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம்

பிரான்​ஸில் யுபிஐ சேவை: அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம்
Updated on
1 min read

பாரிஸ்: பி​ரான்​ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்​தின் புதுமை கண்டுபிடிப்​பு​கள்’ என்ற பெயரில் கடந்த 14-ம் தேதி மாநாடு தொடங்​கியது. இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த 150-க்​கும் மேற்​பட்ட தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள், ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள் பங்​கேற்​றன.

மாநாட்​டின் இறுதி நாளான நேற்று இந்​தி​யா​வின் யுபிஐ சேவை பிரான்ஸ் நாட்​டில் தொடங்கி வைக்​கப்​பட்​டது. மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் இந்​தச் சேவையை அறி​முகம் செய்​தார். அவர் கூறும்​போது, “உல​கத் தரம் வாய்ந்த யுபிஐ டிஜிட்​டல் பணப்பரிவர்த்​தனை பிரான்ஸ் பொருளா​தா​ரத்தை ஊக்குவிக்கும். இந்​தி​யா, பிரான்ஸ் இடையி​லான பொருளா​தார உறவை வலுப்​படுத்​தும்’’ என்றார்.

இந்​திய வெளி​யுறவு செய​லா​ளர் விக்​ரம் மிஸ்ரி கூறும்​போது, “பிரான்​ஸின் சில விமான நிலை​யங்​களில் ஏற்​கெனவே யுபிஐ சேவை அமலில் உள்​ளது. தற்​போது பிரான்​ஸின் பல்​வேறு நகரங்களில் இந்த சேவை அறி​முகம் செய்​யப்​படு​கிறது’’ என்றார்.

ஐக்​கிய அரபு அமீரகம், கத்​தார், சிங்​கப்​பூர், நேபாளம், பூடான், இலங்​கை, மொரிஷியஸ் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களில் யுபிஐ சேவை ஏற்​கெனவே அமல் செய்​யப்​பட்டு உள்​ளது. தற்​போது ஐரோப்​பிய நாடு​களி​லும் இந்​தச் சேவை அறி​முக​மாகிறது. சைப்ரஸ், கிரீஸ் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​கள் யுபிஐ சேவையை அமல்​படுத்த ஆர்​வ​மாக உள்​ளன. இதுதொடர்​பாக சுமார் 30 ​நாடுகளு​டன்​ மத்​திய அரசு ஒப்​பந்​தம்​ செய்​துள்​ளது.

பிரான்​ஸில் யுபிஐ சேவை: அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம்
நிம்மதியான மரணம்... உங்களுக்கு Living Will தெரியுமா? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
பிரான்​ஸில் யுபிஐ சேவை: அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம்
கடன் ரூ.13 லட்சம் கோடி: தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கையில் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in