‘இந்தியாவில் வடிவமைப்பு செய்யாவிட்டால் மின்னணு உதிரிபாக நிறுவனங்களுக்கு சலுகை கிடையாது’

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Updated on
1 min read

புதுடெல்லி: மின்​னணு உதிரி​பாகங்​கள் உற்​பத்தி திட்​டத்​தின் (இசிஎம்​எஸ்) கீழ் பயன்​பெறும் நிறு​வனங்​கள், தங்​களது தயாரிப்புகளை இந்​தி​யா​விலேயே வடிவ​மைக்​கா​விட்​டால் மத்​திய அரசின் சலுகைகள் கிடைக்​காது என்று மத்​திய அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார்.

மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் டெல்​லி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: மின்​னணு உதிரி​பாகங்​கள் உற்​பத்​தித் திட்​டத்​தில் (இசிஎம்​எஸ்) பங்​கேற்​கும் நிறு​வனங்​கள், வெறும் உதிரிபாகங்களை இணைக்​கும் பணி​யோடு நின்​று​வி​டா​மல், உள்நாட்​டிலேயே தயாரிப்​பு​களை வடிவ​மைக்​கும் திறனை மேம்படுத்த வேண்​டும். உள்​ நாட்​டுத் தொழில் சூழலை வலுப்படுத்​து​வ​தில் அக்​கறை காட்​டாத நிறு​வனங்​களை இந்தத்திட்​டத்​தில் இருந்து அப்​புறப்​படுத்த மத்​திய அரசு தயங்காது.

இது​வரை இந்​தத் துறை​யில் நிறு​வனங்​கள் காட்டி வரும் முன்னேற்​றம் மற்​றும் ஒத்​துழைப்பு நாங்​கள் எதிர்​பார்த்த அளவில் இல்லை என்​பதே உண்​மை. நிறு​வனங்​களின் செயல்​பாடு​கள் ஏமாற்​றம் அளிக்​கின்​றன. வடிவ​மைப்பு மற்​றும் தர மேம்​பாட்​டுப் பணி​களில் நிறு​வனங்​கள் மெத்​தன​மாகச் செயல்​படு​வதை ஏற்க முடி​யாது. தொழில் துறை​யினர் தங்​களைச் சீர்​படுத்​திக் கொள்ளாவிட்​டால் மத்​திய அரசு கடுமை​யான முடிவு​களை எடுக்கும்.

அரசு எதிர்​பார்க்​கும் தரநிலைகளை நிறு​வனங்​கள் எட்​டத் தவறினால், அந்த நிறு​வனங்​களுக்கு வழங்​கப்பட வேண்​டிய அடுத்​த கட்ட நிதி மற்​றும் புதிய அனு​ம​தி​கள் உடனடி​யாக நிறுத்தப்​படும். மேலும், ஏற்​கெனவே அனு​மதி வழங்​கப்​பட்ட திட்டங்​களாக இருந்​தா​லும், நிபந்​தனை​கள் பூர்த்தி செய்யப்படவில்லை எனில் அவற்​றுக்​கான நிதி ஒதுக்​கீடும் நிறுத்தி வைக்​கப்​படும்.

மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்ப அமைச்​சகம், இத்திட்டத்தின் நான்​காம் கட்​டத்​தின் கீழ் ரூ.7,104 கோடி மதிப்பிலான 29 விண்​ணப்​பங்​களுக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இசிஎம்​எஸ் திட்​டத்​தின் கீழ் நிர்​ண​யிக்​கப்​பட்ட ரூ.59,350 கோடி முதலீட்டு இலக்கை விட அதி​க​மாக, இது​வரை ரூ.61,671 கோடி மதிப்​பிலான முதலீட்​டுத் திட்​டங்​களுக்கு அனு​மதி வழங்கப்பட்டுள்​ளது.

ஒரு பொருளை உற்​பத்தி செய்​வதைக் காட்​டிலும் அதன் வடிவமைப்​பில்​தான் அதிக மதிப்பு அடங்​கி​யுள்​ளது. தயாரிப்புகளுக்​கான அடிப்​படை வரைபடம் முதல் பொறி​யியல் வடிவ​மைப்பு வரை அனைத்​தும் இந்​தி​யா​விலேயே மேற்​கொள்ளப்பட வேண்​டும். அப்​போது​தான் நமக்​கான உண்மையான பலன் கிடைக்​கும். உற்​பத்தி செய்​வது எளிது, ஆனால் ஒரு வடிவ​மைப்​பைத் துல்​லிய​மான தரத்​துடன் இறு​தித் தயாரிப்​பாக மாற்​று​வது​தான் சவாலானது.

சர்​வ​தேசத் தரத்​தைப் பேண 'சிக்ஸ் சிக்​மா' போன்ற தரக்​கட்டுப்பாட்டு முறை​கள் அவசி​ய​மானவை. அதே​போல், நிறுவனங்கள் வெறும் உள்​கட்​டமைப்​பில் மட்​டும் முதலீடு செய்யாமல், திறமை​யான மனித வளத்தை உரு​வாக்​கு​வ​தி​லும் கவனம் செலுத்த வேண்​டும். இவ்​வாறு அஸ்​வினி வைஷ்ணவ் தெரிவித்​தார்.

<div class="paragraphs"><p>மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்</p></div>
திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ‘டிக்’ செய்தது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in