சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.1,834 கோடியாக அதிகரிப்பு

சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.1,834 கோடியாக அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: வங்கிசாரா நிதி நிறு​வன​மான சுந்தரம் பைனான்ஸ் நடப்​பாண்டு மார்ச் 31-ம் தேதி​யுடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்​டில் ரூ.1,834 கோடியை நிகர லாப​மாக ஈட்​டி​யுள்​ளது. இது முந்​தைய நிதி​யாண்​டின் லாபத்​தைவிட 19% அதிகம்.

நிறு​வனத்​தின் கடன் வழங்​கல் மற்​றும் நிர்​வகிக்​கும் சொத்து மதிப்பு ஆகியவை கணிச​மாக உயர்ந்​ததே இந்த லாப வளர்ச்சிக்கு முக்​கியக் காரணம் என்று அந்​நிறு​வனம் தெரிவித்துள்​ளது. கடந்த நிதி​யாண்​டில் நிறு​வனத்​தின் ஒட்டுமொத்த கடன் வழங்​கல் 14% அதி​கரித்து ரூ.32,321 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. இதன் மூலம், 2026 மார்ச் இறுதி நில​வரப்​படி நிறு​வனத்​தின் நிர்​வகிக்​கும் மொத்த சொத்து மதிப்பு 16% உயர்ந்து ரூ.59,908 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது.

நிறு​வனத்​தின் நிகர வட்டி வரு​வாய் கடந்த நிதி​யாண்​டில் 21 சதவீதம் அதி​கரித்து ரூ.3,376 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. நான்காவது காலாண்​டில் இது 20 சதவீதம் உயர்ந்து ரூ.901 கோடியாக இருந்​தது. நிறு​வனத்​தின் இயக்​குநர் குழு, தனது பங்குதா​ரர்​களுக்கு 240 சதவீத இறுதி டிவிடெண்டை வழங்க முடிவெடுத்து பங்கு ஒன்​றுக்கு ரூ.24 வழங்க பரிந்​துரை செய்துள்ளதாக சுந்​தரம் பைனான்​ஸ்​ தெரி​வித்​துள்​ளது.

சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.1,834 கோடியாக அதிகரிப்பு
நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் தெரியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in