பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி - முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு

சென்செக்ஸ் 1,236 புள்ளிகள் சரிவு
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி - முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு
Updated on
1 min read

மும்பை: இந்திய பங்குச் சந்​தைகள் நேற்​று கடும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.8 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.

உலகளா​விய அரசி​யல் பதற்​றங்​கள் இந்​தி​யச் சந்​தை​யில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன. குறிப்​பாக அமெரிக்கா - ஈரான் இடையி​லான மோதல் போக்கு அதி​கரித்​துள்​ளது உலக முதலீட்டாளர்​களைக் கவலை​யடையச் செய்​துள்​ளது.

கடந்த சில நாட்​களாக சந்தை ஏற்​றம் கண்டு வந்த நிலை​யில், முதலீட்​டாளர்​கள் தங்​களுக்​குக் கிடைத்த லாபத்தை உறுதி செய்வதற்​காகப் பங்​கு​களை விற்​கத் தொடங்​கினர். ஒரு கட்டத்தில் இந்த விற்​பனை வேகம் எடுத்​தவுடன், தொழில்​நுட்ப ரீதி​யாக சந்தை முக்​கிய நிலைகளைத் தாண்டி அதன் குறி​யீடு கீழே இறங்கியது.

மும்பை பங்​குச்​சந்தை குறி​யீட்டு எண்​ணான சென்​செக்ஸ் 1,236.11 புள்​ளி​கள் சரிந்து 82,498.14 என்ற அளவில் நிலைபெற்​றது. அதே​போல், தேசிய பங்​குச்​ சந்தை குறி​யீட்டு எண்​ணான நிஃப்டி 365 புள்​ளி​கள் சரிந்து 25,454.35 – ல் நிலைகொண்​டது. இது தற்காலிகச் சரிவு என்​ப​தைத் தாண்​டி, சந்​தை​யில் நில​வும் ஒரு ​வித அச்​சத்தை வெளிப்​படுத்​து​வ​தாகப் பொருளா​தார வல்லுநர்கள் கருதுகின்​றனர்.

மும்பை பங்​குச் சந்​தை​யில் பட்​டியலிடப்​பட்​டுள்ள நிறு​வனப் பங்​கு​களின் ஒட்​டுமொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.472 லட்​சம் கோடி​யில் இருந்து ரூ.464 லட்​சம் கோடி​யானது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் மட்​டும் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.8 லட்​சம் கோடி இழப்​பு ஏற்​பட்​டது.

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி - முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு
கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் போக்குவரத்து ஊழியர் குடும்பத்தினருக்கு ரூ.7,379 கோடி பணப் பலன்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in