சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிவு: ஒரே நாளில் ரூ.4.6 லட்சம் கோடி இழப்பு

சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிவு: ஒரே நாளில் ரூ.4.6 லட்சம் கோடி இழப்பு
Updated on
1 min read

மும்பை: இந்​திய பங்​குச் சந்​தைகளில் நேற்று நடை​பெற்ற வர்த்​தகம் பெரும் சரிவை சந்​தித்​தது.

உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த வரியை அந்நாட்டு உச்ச நீதி​மன்றம் ரத்து செய்தது. இதையடுத்து சில நாடு​களுக்கு எதி​ராக 15% வரை வரி விதிக்​கப்​படும் என்ற அதிபர் டொ​னால்டு ட்ரம்​பின் நிலைப்​பாடு உலகளா​விய முதலீட்​டாளர்​களிடையே அச்​சத்​தை​யும், நிலை​யற்ற தன்​மை​யை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்த நிலை​யில் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தில் குறிப்​பாக ஆந்த்​ரோபிக் நிறு​வனத்​தின் புதிய வெளி​யீடு மென்​பொருள் துறை​யில் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்ற நிலைப்​பாட்​டால் இன்​போசிஸ், டிசிஎஸ், ஹெச்​சிஎல்​டெக் போன்ற ஐடி துறை பங்​கு​கள் 6 சதவீதம் வரை சரிவை சந்​தித்​தன.

இவைத​விர, கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் அமெரிக்க டாலருக்கு நிக​ரான ரூபாய் மதிப்பு சரி​வும் சந்​தை​யில் பெரும் பின்​னடைவை ஏற்​படுத்​தி​யது. நேற்று ஒரே நாள் வர்த்​தகத்​தில் மட்​டும் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.4.6 லட்​சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, மும்பை பங்​குச் சந்​தை​யில் பட்​டிய​லாகி​யுள்ள நிறு​வனங்​களின் சந்தை மூலதனம் ரூ.464 லட்​சம் கோடி​யாக சரிவை சந்​தித்​தது.

சென்​செக்ஸ் 1,069 புள்​ளி​கள் வீழ்ச்​சி​யடைந்து 82,225-ல் நிலைபெற்​றது. தேசிய பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் நிப்டி 288 புள்​ளி​கள் சரிவடைந்து 25,424 புள்​ளி​களில் நிலைத்​தது.

சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிவு: ஒரே நாளில் ரூ.4.6 லட்சம் கோடி இழப்பு
தனித்து விடப்பட்ட தவெக: அதீத நம்பிக்கையில் இருக்கிறாரா விஜய்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in