இ-விதாரா மின்சார கார் விற்பனை தொடக்கம்

இ-விதாரா மின்சார கார் விற்பனை தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: இந்​தி​யா​வின் மின்​சார வாகன பயணத்​தில் முக்​கிய கட்​டத்தை குறிக்​கும் வகை​யில், மாருதி சுசூகி இந்​தியா நிறு​வனம், இ-வி​தாரா (e-VITARA) என்ற தனது முதல் முழு​மை​யான மின்​சார எஸ்​யுவி கார் விற்பனையைத் தொடங்​கி​யுள்​ளது.

பேட்​டரியை மாற்​றிக் கொள்​ளும் (Battery-as-a-Service) திட்​டத்​தின் கீழ் இதன் அறி​முக விலை ரூ.10.99 லட்​சம் முதல் தொடங்​கு​கிறது. மேலும், பேட்​டரிக்​கான இஎம்ஐ கிலோ மீட்​டருக்கு ரூ.3.99 முதல் வழங்​கப்​படு​கிறது.

இ-வி​தாரா இரண்டு பேட்​டரி விருப்​பங்​களில் (61kWh, 49kWh) கிடைக்​கிறது. முழு சார்​ஜில் அதி​கபட்​ச​மாக 543 கிலோமீட்​டர் வரை பயணம் செய்​யும் திறன் கொண்​டது. 8 ஆண்டு அல்​லது 1,60,000 கி.மீ (எது முதலில் வருமோ அது வரை) பேட்​டரி உத்​தர​வாதம் வழங்​கப்​படு​கிறது.

வாடிக்​கை​யாளர்​களுக்கு வீட்​டிலேயே 7.4 கேடபிள்யு ஏசி வால் பாக்ஸ் சார்​ஜர் வசதி, ஒரு வருடம் இ பார் மி (e for me) செயலி​யின் மூலம் இலவச சார்​ஜிங் வசதி உள்​ளது.

மேலும் காரை வாங்கி 3 மற்​றும் 4 ஆண்​டு​களில் விற்க நினைப்​போருக்​காக, திரும்​பப்​பெறும் (Assured Buyback) வசதி​யும் வழங்​கப்​படு​கிறது.

மேம்​பட்ட பாது​காப்பு அம்​சங்​களு​டன் Level 2 ADAS (பாது​காப்பு உதவி​யாளர்), 7 ஏர்​பேக், 5 நட்​சத்​திர பாரத் NCAP பாது​காப்பு மதிப்​பீடு மற்​றும் அடுத்த தலை​முறை சுசூகி கனெக்ட்​ ஆகிய வசதி​களும்​ இதில்​ உள்​ளன.

இ-விதாரா மின்சார கார் விற்பனை தொடக்கம்
“ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த போகிறோம்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in