“ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த போகிறோம்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Updated on
2 min read

வாஷிங்டன்: ஈ​ரான் மீது மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போர் 8-வது நாளாக நேற்​றும் நீடித்​தது. ஈரானில் இது​வரை 1,332 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ஆயிரக்​கணக்​கானோர் காயமடைந்து உள்​ளனர். ஈரானின் வான் பாது​காப்பு கவசங்​களில் 80 சதவீதம் அழிக்​கப்​பட்டு உள்​ளது. ஈரான் கடற்​படை​யின் 30 போர்க்​கப்​பல்​கள் தகர்க்​கப்​பட்டு உள்​ளன.

அந்த நாட்டு விமானப் படை​யில் 8 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்டு உள்​ளன. அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரான் தலைநகர் டெஹ்​ரான் உட்பட 174 நகரங்​களின் அரசு கட்​டமைப்​பு​கள் தரைமட்​ட​மாக்​கப்​பட்டு உள்​ளன.

மத்​திய கிழக்​கில் சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம், கத்​தார் உள்​ளிட்ட நாடு​களில் 20-க்​கும் மேற்​பட்ட அமெரிக்க ராணுவ தளங்​கள் செயல்​படு​கின்​றன. அவற்றை குறி​வைத்து ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவு​கணை, ட்ரோன் தாக்​குதல்​ நடத்தி வரு​கிறது.

ஜோர்​டான் நாட்​டில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்​தில், தாட் வான் பாது​காப்பு கவசத்தை ஏவு​கணை தாக்​குதல் மூலம் அழித்​து​விட்​ட​தாக ஈரான் ராணுவம் தெரி​வித்​துள்​ளது. இதன் மதிப்பு ரூ.22,000 கோடி ஆகும். 8 நாள் போரில் அமெரிக்கா​வுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்​பட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. மேலும் 6 அமெரிக்க வீரர்​களும் உயி​ரிழந்​துள்​ளனர். ஈரான் தாக்​குதல்​களில் இஸ்​ரேலில் இது​வரை 12 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 1,200-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். அந்த நாடு முழு​வதும் அவசர நிலை அமல் செய்​யப்​பட்​டிருக்​கிறது.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அண்டை நாடு​கள் மீது தாக்​குதல் நடத்த மாட்​டோம் என்று ஈரான் அறி​வித்​துள்​ளது. மேலும் அண்டை நாடு​களிடம் மன்​னிப்​பும் கோரி​யுள்​ளது. அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலை சமாளிக்க முடி​யாமல் ஈரான் இந்த முடிவை எடுத்​துள்​ளது. அந்த நாட்​டின் அத்​து​மீறல்​களால் சுமார் ஆயிரம் ஆண்​டு​களுக்​கும் மேலாக மத்​திய கிழக்​கின் அமைதி பாதிக்​கப்​பட்டு உள்​ளது.

தற்​போது ஈரானின் அத்​து​மீறல்​களுக்கு தகுந்த பதிலடி கொடுக்​கப்​பட்டு வரு​கிறது. மிகப்​பெரிய இழப்பை அந்த நாடு சந்​தித்து உள்​ளது. அந்த நாட்டை நரகத்​துக்கு தள்ளி உள்​ளோம். இதற்​காக ஈரானின் அண்டை நாடு​கள், எனக்கு நன்றி தெரி​வித்​துள்​ளன.

இன்​றைய தினம் (சனிக்​கிழமை) ஈரான் மீது மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​படும். ஈரான் சரண் அடை​யும். இல்​லை​யெனில் முழு​மை​யாக வீழ்ச்சி அடை​யும். ஈரான் ஆட்​சி​யாளர்​களின் தவறான நடவடிக்கைகளால் மிக மோச​மான விளைவு​கள் ஏற்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

போர்க்​கப்​பல்​கள் குவிப்பு: பிரிட்​டனின் குளோஸ்​டர்​ஷையர் விமானப் படைத் தளம், இந்​திய பெருங்​கடலின் டியாகோ கார்​சியா தீவில் உள்ள அமெரிக்க, பிரிட்​டிஷ் கூட்டு விமானப் படைத் தளத்​தில் போர் விமானங்​களின் நடமாட்​டம் கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக அமெரிக்க விமானப் படை​யின் அதிநவீன பி-1 லான்​சர், பி-2 ஸ்பிரிட், பி-52 ஸ்ட்​ராடோ​போர்ட்​ரஸ் ஆகிய போர் விமானங்​கள் இரு விமானப் படைத் தளங்​களி​லும் தயார் நிலை​யில் நிறுத்​தப்​பட்டு உள்​ளன.

மேலும் மத்​திய கிழக்​கில் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் குவிக்​கப்​பட்டு உள்​ளன. குறிப்​பாக யுஎஸ்​எஸ் ஜெரால்டு ஆர் போர்​டு, வின்​ஸ்​டன் எஸ் சர்ச்​சில், மாஹன், பெயின்​பிரிட்​ஜ், ரூஸ்​வெல்ட், பல்​கேலி, தாமஸ்​ஹட்​னர் ஆகிய போர்க்​கப்​பல்​கள் மத்​திய கிழக்​கில் நிலைநிறுத்​தப்​பட்டு உள்​ளன. இந்த போர்க்​கப்​பல்​கள் ஈரான் மீது தொடர் தாக்​குதல்​ நடத்தி வரு​கின்​றன.

அரபிக் கடலில் அமெரிக்​கா​வின் யுஎஸ்​எஸ் ஆபிர​காம் லிங்​கன், பிராங்க் இ பீட்​டர்ன், ஸ்ப்​ரூயன்​ஸ், மைக்​கேல் முர்​பி, மெக்​பால், ஜான் பின், மிலியஸ், டெல்​பெர்ட் டி பிளாக், பிக்​னே, மிட்​சர் ஆகிய போர்க்​கப்​பல்​கள் முகாமிட்டு ஈரானுக்கு எதி​ரான தாக்​குதல்​களை தீவிரப்​படுத்தி வரு​கின்​றன.

இவை தவிர பிரிட்​டனின் எச்​எம்​எஸ் டிராகன், பிரான்​ஸின் சார்​லஸ் டி கல்​லே, எப்​எஸ் லாங்​கு​டாக், கிரீஸ் நாட்​டின் பசா​ரா, கிமோன் போர்க்​கப்​பல்​களும் மத்​திய கிழக்கு பகு​திக்கு அனுப்​பப்​பட்டுள்​ளன.

<div class="paragraphs"><p>அமெரிக்க அதிபர் ட்ரம்ப்</p></div>
மாநில அளவிலான வாலிபால் போட்டி: சிவந்தி கிளப் அணி வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in