

மும்பை: இந்த மாத தொடக்கத்தில் மும்பை- புனே அதிவேக நெடுஞ்சாலையில் (எக்ஸ்பிரஸ் வே) ஏற்பட்ட மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, ரூ.5.16 கோடி சுங்கக் கட்டணம் திருப்பித்தரப்படும் என்று மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் (எம்எஸ்ஆர்டிசி) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 3ம் தேதி, மும்பை- புனே அதிவேக நெடுஞ்சாலையின் கோபோலி பகுதியில் எரிவாயு டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் 33 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதால், பயணிகள் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். என்பது குறிப்பிடத்தக்கது.