தமிழகத்தில் அதிகரித்து வரும் அரிசி விலை: பொன்னி கிலோ ரூ.80 ஆக உயர்வு

தமிழகத்தில் அதிகரித்து வரும் அரிசி விலை: பொன்னி கிலோ ரூ.80 ஆக உயர்வு
Updated on
1 min read

சென்னை: ஆந்​தி​ரா, கர்​நாடக மாநிலங்​களில் விளைச்​சல் குறைவு காரண​மாக தமிழகத்​தில் அரிசி விலை தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.80-க்கு விற்​கப்​படுகிறது.

தமிழகத்​தில் சாதம், பிரி​யாணி, பிரைடு ரைஸ், இட்​லி, தோசை, புட்டு என அரிசி உணவு அதி​க​மாக உட்​கொள்​ளப்​படு​கிறது. மேலும், அதிரசம், முறுக்​கு, கொழுக்கட்​டை, பனி​யாரம் போன்ற தின்​பண்​டங்​களும் அரிசி​யில் செய்​யப்​படு​வது வழக்​கம்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் கடந்த ஒரு மாத​மாக படிப்​படி​யாக அரிசி விலை உயர்ந்து வரு​கிறது. கடந்த மாதம் கிலோ ரூ.65-க்கு விற்​கப்​பட்ட பொன்னி அரிசி தற்​போது கிலோ ரூ.80 ஆகவும், பாபட்​லா, ஆர்​என்​ஆர் ரக அரிசி ரூ.55-லிருந்து ரூ.70 ஆகவும், சீரக சம்பா ரூ.120-லிருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்​துள்​ளது.

இதனால் பொது​மக்​கள் கடும் சிரமத்​துக்கு உள்​ளாகி வரு​கின்​றனர். இதுதொடர்​பாக திரு​வல்​லிக்​கேணி, பார்​வதி அரிசி கடை வியா​பாரி பாலசண்​முகம் கூறியதாவது: தமிழகத்​தின் அரிசி தேவையை ஆந்​தி​ரா, கர்​நாடக மாநிலங்​கள் பூர்த்தி செய்து வரு​கின்​றன.

தமிழக அரிசி பெரும்​பாலும் பொது​விநி​யோகத்​துக்கு சென்​று​விடு​கிறது. குறைந்த அளவே தமிழகத்​தில் விற்​கப்​படு​கிறது. இதற்​கிடையே, பரு​வ​மழை குறைவு, வெயி​லின் தாக்​கம் அதி​கரிப்பு காரண​மாக ஆந்​தி​ரா, கர்​நாடக மாநிலங்​களில் நெல் விளைச்​சல் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால் வரத்து குறைந்​து, அதன் விலை உயர்ந்​துள்​ளது.

இதனால் சென்னை போன்ற பெருநகரங்​களில் ஒரு கிலோ அரிசி ரூ.10 முதல் ரூ.15 வரை​யும், 25 கிலோ மூட்​டைக்கு ரூ.250 முதல் ரூ.375 வரை​யும் உயர்ந்​துள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

திரு​வண்​ணா​மலை மாவட்​டம், ஆரணி, களம்​பூர் நெல், அரிசி வியா​பாரி​கள் சங்க கவுர​வத் தலை​வர் ராம் மணி கூறும்​போது, “கடந்த ஆண்டு தமிழகத்​தில் பரு​வ​மழை சிறப்​பாக இல்​லை. அதனால் நெல் விளைச்​சல் குறைந்​துள்​ளது.

100 மூட்டை விளை​வித்த விவ​சா​யி, இப்​போது 20 மூட்​டை​தான் விளைவிக்​கிறார். 2 மாதத்துக்கு முன்பு ஒரு மூட்டை நெல் ரூ.1,700-க்கு கிடைத்​தது.

பற்​றாக்​குறை​யால் இப்​போது ரூ.2,200 முதல் 2,400 வரை உயர்ந்​துள்​ளது. அதனால் அரிசி விலை​யும் உயர்ந்​து​விடு​கிறது. அடுத்​த மாதம்​ மேலும்​ விலை உயர வாய்ப்​புள்​ளது” என்​றார்​.

தமிழகத்தில் அதிகரித்து வரும் அரிசி விலை: பொன்னி கிலோ ரூ.80 ஆக உயர்வு
பழநி கோயில் நிலங்களை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைப்பு: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in