

மும்பை: கடந்த 2025ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வட்டி குறைப்புகளுக்குப் பிறகு, பெரும்பாலான வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை சுமார் 125 புள்ளிகள் வரை அதாவது 1.25% குறைத்திருக்கினறன. மேலும் வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், சமீப காலமாக பண வீக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கை ஆய்வறிக்கையில் நேற்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றமும் இருக்காது.