

சென்னை: நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் மதிப்புமிக்க பிராண்டுகளை அங்கீகரிக்கும் ‘பிராண்ட் பைனான்ஸ் இந்தியா 100- 2026’ அறிக்கை சமீபத்தில் மும்பையில் வெளியிடப்பட்டது.
‘இந்தியாவின் உலகளாவிய எழுச்சிக்கு வலு சேர்த்தல்’ என்ற கருப்பொருளில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, நாட்டின் மிக மதிப்புமிக்க மற்றும் வலிமையான டயர் பிராண்டாக நாட்டின் மிகப்பெரிய டயர் தயாரிப்பாளரான எம்ஆர்எப் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மேலும், வாகனம், விருந்தோம்பல், வங்கி, உணவு, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அனைத்து தொழில் துறைகளையும் உள்ளடக்கிய இந்தியாவின் முதல் 50 மதிப்புமிக்க பிராண்டுகளின் பட்டியலிலும் எம்ஆர்எப் இடம்பிடித்துள்ளது.
உலகளவில், 100-க்கு 87.7 என்ற வலிமை குறியீட்டுடன் உலகின் முதல் 3 வலிமையான டயர் பிராண்டுகளில் ஒன்றாகவும் எம்ஆர்எப் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்ஆர்எப் நிறுவன தலைவர் கே.எம். மாம்மென் கூறும்போது, “இந்த அங்கீகாரம் எம்ஆர்எப் மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது. இது பாதுகாப்பு மற்றும் புத்தாக்கத்துக்கான எங்களது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.