பயணிகள் வருகையில் புதிய உச்சம் தொட்ட மதுரை விமான நிலையம்!

2024-ஐ காட்டிலும் 2025-ல் பயணிகள் 11% உயர்வு
மதுரை விமான நிலையம் | கோப்புப்படம்

மதுரை விமான நிலையம் | கோப்புப்படம்

Updated on
2 min read

மதுரை: 2024-ம் ஆண்டை காட்டிலும், 2025-ம் ஆண்டு உள்நாட்டு பயணிகள் வருகை 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், 2025-ம் ஆண்டு மதுரை விமான நிலையத்துக்கு நம்பிக்கையூட்டும் ஆண்டாக அமைந்துள்ளது.

மதுரை விமான நிலையத்துக்கு 2025-ம் ஆண்டு பயணிகள் வருகை முந்தைய உச்ச நிலைகளுக்கு அருகே உள்ள எண்ணிக்கையை மீண்டும் எட்டியுள்ளது. இதுவரை உள்நாட்டு பயணிகள் வருகையின் உச்சமாக 2018-ம் ஆண்டு பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 12.5 லட்சம் பயணிகள் வந்துள்ளனர். தற்போது 2025-ம் ஆண்டு 12.2 லட்சம் என்பது இந்த எண்ணிக்கையை மிக அருகில் தொட்டுவிட்டது.

மொத்த பயணிகள் உச்சமாகவும் 2018-ம் ஆண்டுதான் உள்ளது. இந்த ஆண்டில் 15.8 லட்சம் பயணிகள், மதுரை விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். 2025-ம் ஆண்டில் 14.3 லட்சம் பயணிகள் வந்துள்ளனர். அதனால், உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கையை போல் மொத்த பயணிகள் எண்ணிக்கையிலும், 2025-ம் ஆண்டு மதுரை விமான நிலையத்திற்கு நம்பிக்கையூட்டும் ஆண்டாக அமைந்துள்ளது.

இதுகுறித்து மதுரை உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குழுமத்தை சேர்ந்த முகமது முஸ்தபா, இந்து தமிழ் திசை-யிடம் கூறியதாவது: கடந்த 2024 ஆண்டை ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டு விமானப் பயணத்தில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக உள்நாட்டு பயணிகள் அதிகரித்ததால் மொத்த பயணிகள் வருகை எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. சரக்கு (Cargo) போக்குவரத்திலும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச பயணிகள் எண்ணிக்கை மட்டும் சிறிது குறைந்தாலும், அது பயணிகள் இல்லாததால் அல்ல. விமான சேவை குறைவால்தான் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மதுரை விமான நிலையத்துக்கு 2024-ம் ஆண்டு உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை சேர்த்து 13.2 லட்சம் பயணிகள் வந்துள்ளனர். 2025-ம் ஆண்டு 14.3 லட்சம் பயணிகள் வந்துள்ளனர்.

அதனால், கடந்த 2024-ம் ஆண்டை ஒப்பிடும்போது பயணிகள் வருகை சுமார் 8 சதவீதம் 2025-ம் ஆண்டு ஆண்டு உயர்ந்துள்ளது. உள்நாட்டு பயணிகள் வருகை கணக்கீடும்போது 2024-ம் ஆண்டு 10.9 லட்சம் பயணிகள் வந்துள்ளது. 2025-ம் ஆண்டு 12.2 லட்சம் (சராசரியாக மாதம் 1 லட்சம் பயணிகள்) பயணிகள் வந்துள்ளனர்.

உள்நாட்டு பயணிகள் மட்டும் கடந்த 2024-ம் ஆண்டை விட 2025-ம் ஆண்டு 11 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச பயணிகள் பயணிகளை ஒப்பிடும்போது, 2024-ம் ஆண்டு 2.31 லட்சம் பயணிகள் வந்துள்னர். 2025-ம் ஆண்டு 2.08 லட்சம் பயணிகள் வருகை சிறிது குறைந்துள்ளது.

உள்நாட்டு பயணிகள் அதிகரித்து இருப்பதற்கு, மதுரைக்கு வணிகப் பயணம், சுற்றுலா, குடும்பப் பயணம் ஆகியவை மீண்டும் அதிகரித்ததை காட்டுகிறது. சரக்கு போக்குவரத்து, இந்த ஆண்டின் பெரிய நல்ல செய்தியாக ஒட்டுமொத்தமாக மொத்த சரக்கு போக்குவரத்து சுமார் 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதில், உள்நாட்டு சரக்கு போக்குவரத்து 27 சதவீதம் உயர்வும், (மிகவும் அதிகம்), சர்வதேச சரக்கு போக்குவரத்தில் சற்று உயர்வும் ஏற்பட்டுள்ளது. இது மதுரையில் ஆன்லைன் விற்பனை, வணிகப் பொருட்கள், லாஜிஸ்டிக்ஸ் ஆகியவை அதிகரித்ததைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சர்வதேச பயணிகள் ஏன் குறைந்தனர்? - பயணிகள் வருகை சிறிது குறைந்துள்ளதற்கு, மதுரைக்கு சர்வதேச விமான நிறுவனங்களின் சேவை முறையே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய விமான நிறுவனங்கள் பெரும்பாலும் ஹப் (Hub) என்ற முறையை பின்பற்றுகின்றன.

அதாவது, மதுரை போன்ற நகரங்களில் இருந்து நேரடி வெளிநாட்டு விமானம் இயக்காமல், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்களுக்கு முதலில் பயணிகளை அழைத்துச் சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றன. ஆனால் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அவர்களது சொந்த ஹப் நகரங்கள் இருப்பதால், நேரடி சர்வதேச விமானம் தொடங்குவதற்கு மட்டுமே ஆர்வம் இருக்கிறது.

மத்திய அரசின் ஒப்பந்தம் மற்றும் அனுமதி (BASA / PoC) விஷயங்கள் காரணமாக அவை இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால், சர்வதேச பயணிகள் வருகை சிறது குறைந்ததற்கு காரணம் பயணிகள் இல்லாத பிரச்சினை அல்ல. சேவை மற்றும் அனுமதி தொடர்பான பிரச்சினையாக மட்டுமே பார்க்க வேண்டும்.

<div class="paragraphs"><p>மதுரை விமான நிலையம் | கோப்புப்படம்</p></div>
“அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு தகுதியில்லை” - நயினார் நாகேந்திரன் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in