

ஜீ குழுமத்தின் நிறுவனர் சுபாஷ் சந்திரா
புதுடெல்லி: ஜீ குழுமத்தின் நிறுவனர் சுபாஷ் சந்திரா பெரும் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளார். ஜீ குழுமம் சார்பில் வாங்கப்பட்ட ரூ.22,000 கோடி கடன் நிலுவையில் இருக்கும் நிலையில், தான் திவால் அடைந்துவிட்டதாக அறிவித்து, கடன் உத்தரவாதங்களுக்கு ரூ.6.25 கோடி செலுத்த அவர் முன் வந்தார்.
அதை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. இதற்கு வங்கிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தை அடுத்து, தீர்ப்பாயம் தனது உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், ஜீ குழும நிறுவனங்களுக்கு, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (LICHFL) நிறுவனத்திடமிருந்து ரூ.1,322 கோடி கடன் பெறுவதற்காக போலி சொத்து மதிப்பு சான்றிதழ்களை வழங்கியதாகக் கூறப்படும் வழக்கில், சுபாஷ் சந்திரா மற்றும் சில தனி நபர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
அவரை தவிர, ஜீ குழுமத்தின் வசந்த் சாகர் பிராப்பர்டீஸ், அதன் இயக்குநர் பங்கஜ் சுரோலியா உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.