

சென்னை: நேற்று முன் தினம் இரவு 8.25 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா விமானம், சென்னையில் இருந்து இரவு 9.05 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், குவைத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.25 மணிக்கு சென்னை வரவேண்டிய குவைத் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று அதிகாலை 3.25 மணிக்கு சென்னையில் இருந்து குவைத் செல்ல வேண்டிய குவைத் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் மும்பை, குவைத் ஆகிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு போதிய பயணிகள் இல்லாததே என்று கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8 மணியிலிருந்து நேற்று அதிகாலை வரை டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, கோவை உள்ளிட்ட 12 புறப்பாடு விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.