மகன் உரையைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த முகேஷ் அம்பானி

சந்தையில் பட்டியலிடப்பட்ட ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள்
மகன் உரையைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த முகேஷ் அம்பானி
Updated on: 
1 min read

மும்பை: ரிலையன்ஸ் குழு​மத்​தின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறவன பங்​கு​கள் நேற்று பங்​குச் சந்​தையில் பட்​டியலிடப்​பட்​டன. இது​தொடர்​பான நிகழ்ச்​சி​யில் மகன் ஆனந்த் உரையாற்றியதைக் கேட்டு நிறு​வனத் தலை​வர் முகேஷ் அம்பானி ஆனந்​தக் கண்​ணீர் வடித்​தார்.

ரிலை​யன்ஸ் குழு​மத்​தின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறு​வனம் முதல்​முறை​யாக பொது பங்​கு​களை வெளி​யிட்​டுள்​ளது (ஐபிஓ). ஒரு பங்​குக்கு 1,119 ரூபாய் என்ற விலை​யில் 30,213 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்​ட​மிடப்​பட்​டது. இந்த பங்குகள் மும்பை மற்​றும் தேசிய பங்​குச்​சந்​தையில் நேற்று காலை பட்​டியலிடப்​பட்​டன. அப்போது நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் முகேஷ் அம்​பானி​யின் மகன் ஆனந்த், மகள் இஷா அம்​பானி ஆகியோர் பேசினர்.

இஷா அம்​பானி பேசும்​போது, “சில நாட்​களுக்கு முன்பு எனது தந்தை முகேஷ் அம்​பானியுடன் பேசி​யபோது 1977-ல் நடந்த சில நிகழ்ச்​சிகளை பகிர்ந்​து​கொண்​டார். அப்​போது அவருக்கு வயது 20. அப்​போது​தான் ரிலை​யன்ஸ் நிறு​வனம் ஐபிஓ வெளி​யிட்​டது. எனது தாத்தா திருபாய் அம்​பானி இந்த முடிவை எடுத்​திருந்​தார்.

இப்​போது ஜியோ பங்​கு​கள் பட்​டியலிடப்​பட்​டுள்​ளன. ஜியோ நிறுவனத்தை கட்டி எழுப்​புவதில் எங்​கள் தந்தை மிகப்​பெரிய பங்களிப்​பைச் செய்​தார். மற்​றவர்​கள் சாத்​தி​யமில்லை என்று கைவிட்​டதை சாத்​தி​ய​மாக்​கினார்” என்​றார்.

மகன் ஆனந்த் அம்​பானி பேசும்​போது, “இன்று மிக முக்​கிய​மான ஒரு சொல்​லுடன் என் பேச்​சைத் தொடங்​கு​கிறேன். அந்த சொல் ‘நன்​றியுணர்வு’. ஜியோவை நம்பி, இன்​றைய நாளைச் சாத்​தி​ய​மாக்​கிய கோடிக்​கணக்​கான மக்​களுக்கு நன்றி. பங்​குச் சந்​தையில் ஒலிக்​கப்​போகும் அந்த மணி, எனக்கு ஒரு கோயில் மணி​.

ஏனெனில், வணிகம் என்​பது ஒரு ‘பூஜை’தான். ஒவ்​வொரு பூஜையும் ‘பிரசாதத்​துடன்’ நிறைவடையும். பிரசாதம் என்​பது எப்போதும் மற்​றவர்​களு​டன் பகிர்ந்து கொள்​ளப்​பட வேண்​டிய ஒன்று. இன்று, ஜியோ எனும் இந்த பிரசாதம் ஒட்​டுமொத்த இந்தியா​வுடனும் பகிர்ந்து கொள்​ளப்​படு​கிறது” என்​றார்.

அப்​போது ஆனந்த் அம்​பானி​யின் பேச்​சைக் கேட்ட முகேஷ் அம்பானி ஆனந்​தக் கண்​ணீர் வடித்​தார். கண்​களில் வழிந்த கண்ணீரை அவர் அவ்​வப்​போது துடைத்​துக் கொண்​டார்.

27% உயர்வு

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்​கு​கள் நேற்று காலை​யில் 21.36% உயர்வுடன் (ரூ.1,358) பட்​டியலிடப்​பட்​டது. வர்த்​தகத்​தின் இறுதி​யில் ரூ.1,419 (26.81%) என்ற விலை​யில் நிலைபெற்​றது.

மகன் உரையைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த முகேஷ் அம்பானி
செர்பிய சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி மாணவர் சக்தி வென்றது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in