சமையல் காஸ் சிலிண்டர்களை இனி இன்ஸ்டாமார்ட் சப்ளை செய்யும் - ஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சமையல் காஸ் சிலிண்டர்களை இனி இன்ஸ்டாமார்ட் சப்ளை செய்யும் - ஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஸ்விக்கியின் அங்கமான இன்​ஸ்​டா​மார்ட் நிறு​வனம் மளி​கை, வீட்டு உபயோகப் பொருட்​களை 10 நிமிடங்​களில் விநியோகம் செய்து வரு​கிறது. தற்​போது சமையல் காஸ் சிலிண்டரும் தங்​கள் செயலி​யின் மூலம் விநி​யோகம் செய்யப்படும் என இன்​ஸ்​டா ​மார்ட் தெரி​வித்​துள்​ளது.

இதற்​காக இந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் கார்ப்​பரேஷன் (ஹெச்பிசிஎல்) நிறு​வனத்​துடன் ஸ்விக்கி ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. இந்​தத் திட்​டம் முதல்​கட்​ட​மாக பெங்​களூ​வில் அறி​முகம் செய்யப்பட்​டுள்​ளது. அங்கு கிடைக்​கும் வரவேற்​பைப் பொறுத்​து, விரை​வில் சென்​னை, டெல்​லி, கொல்​கத்​தா,மும்பை உள்​ளிட்ட நாட்​டின் பிற முக்​கிய நகரங்​களுக்​கும் இந்த சேவை விரிவுபடுத்தப்​படும்.

தொடக்​கத்​தில் 10 கிலோ எடை​யுள்ள ஹெச்பி நவ்யா சிலிண்டரும், சிறிய தேவை​களுக்​கான 5 கிலோ எடை​யுள்ள வழக்க​மான மெட்​டல் சிலிண்​டரும் கிடைக்​கும். இந்​தச் சேவையைப் பெற ஏற்​கெனவே சிலிண்​டர் இணைப்பு இருக்க வேண்​டும் என்ற கட்​டா​யம் இல்​லை. மேலும் வழக்​க​மான முறையைப் போலவே முதல்​முறை வாங்​கும்​போது காலி சிலிண்டர் தரவேண்​டாம், அடுத்​தடுத்த முறை காலி சிலிண்டர்களை கொடுத்து பெற்​றுக் கொள்​ளலாம்.

சமையல் காஸ் சிலிண்டர்களை இனி இன்ஸ்டாமார்ட் சப்ளை செய்யும் - ஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
உ.பி. - நொய்டா தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in