

இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் பரேக்
பெங்களூரு: நாட்டின் 2-வது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் பரேக்கின் ஆண்டு ஊதியம் 2026-ம் நிதியாண்டில் 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.82.6 கோடியை எட்டியுள்ளது. அவர் சம்பளமாக ரூ.7.97 கோடியும், போனஸாக ரூ.23.35 கோடியும் பெற்றார். இந்த ஆண்டுக்கான அவரது மொத்த வருவாயில், பரேக் தனது பங்குகள் மூலம் மிகப் பெரிய தொகையாக ரூ.50.75 கோடியை பெற்றுள்ளார். 2026 நிதியாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனம் 3.1 சதவீத வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 2027 நிதியாண்டில் 1.5 முதல் 3.5 சதவீதம் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சலில் பரேக்கின் 5 ஆண்டு பதவிக் காலம் அடுத்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. அவரது பதவி நீட்டிக்கப்படுமா என்பது பற்றி இதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.